நெருக்கடியான நேரத்தில் இந்திய மக்களை காப்பாற்றுவது எங்கள் கடமை.. அமேசான் உருக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமான நிலையில் இருந்து நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. அதோடு பல கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன.

அந்த வகையில் முன்னனி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும், இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றது.

அமேசான் உதவி

அமேசான் உதவி

இதற்காக அமேசான் நிறுவனம் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் NGOsகளுக்குடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்த குழு அவசர தேவைக்கு சில மருத்துவ உபகரணங்களை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக 10,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் (oxygen concentrators) மற்றும் 500 பிபாப் (BiPAP) இயந்திரங்களையும் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

பல்வேறு அமைப்புகள்

பல்வேறு அமைப்புகள்

அமேசான், சிங்கப்பூரிலிருந்து 8000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 500 பிபாப் இயந்திரங்களை அவசரமாக விமானத்தில் கொண்டு வர, ஆக்ட் கிராண்ட்ஸ், டெமாசெக் பவுன்டேஷன், பிபிசிஆர் மற்றும் இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. மேற்கண்ட இந்த குழுக்கள் இந்தியாவுக்கு, இந்த மருத்துவ பொருட்கள் விரைவில் வந்தடைய இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தற்போதைய தேவை
 

இந்தியாவின் தற்போதைய தேவை

இந்த மருத்துவ உபகரணங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் உள்ள இந்திய மக்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனைகள் மற்றும் பொது நிறுவனங்களும் நன்கொடையாக அளிக்கப்படும். இந்தியாவினை கொரோனா நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் பாதித்துள்ளது. ஆக நாட்டின் தற்போதைய உடனடி தேவையை ஆதரிப்பதற்கு, தேவையான மருத்துவ உபகரணங்களை விமானத்தில் கொண்டு செல்ல, எங்களது சர்வதேச லாகிஸ்டிக்கினை பயன்படுத்துகிறோம் என்றும் உலகளாவிய மூத்த துணைத் தலைவரும், இந்தியாவின் தலைவருமான அமித் அகர்வால் கூறியுள்ளார்.

செலவுகளை அமேசான் ஏற்கும்

செலவுகளை அமேசான் ஏற்கும்

மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களை காப்பாற்றுவது எங்கள் கடமை என கூறியுள்ள அமேசான், ஜெஃப் பெசோஸ் தலைமையிலான அமேசான், இந்த லாகிஸ்டிக்ஸ் செலவுகளை ஏற்கும் என்றும் கூறியுள்ளது. இந்த மருத்துவ உபகரணங்களுக்கான செலவை ஆக்ட் கிராண்ட்ஸ், பிபிசிஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: we committed to support the nation in this time of crisis, says Amazon

Amazon updates.. Coronavirus impact: we committed to support the nation in this time of crisis, says Amazon
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X