கேப் ஓட்டுநர்களுக்கு கொடுத்த 30,000 கோடி ரூபாய்! வசூலிக்கத் திணறும் வங்கிகள்!

இந்திய பெருநகரங்களில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேப் சேவை தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் முடங்கியுள்ளது. ஆன்லைன் கேப் வர்த்தக வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது வங்கிகள் கார் ஒட்டுனர்களுக்குத் தாராளமாக வழங்கப்பட்ட கடன்கள் என்றால் மிகையாகாது.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் கேப் ஒட்டுனர்கள் முடங்கியுள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தற்போது இந்திய வங்கிகள் தள்ளப்பட்டு உள்ளது. என்ன காரணம் தெரியுமா..?

60 சதவீத டிரைவர்கள்

60 சதவீத டிரைவர்கள்

இந்தியாவில் 60 சதவீத கேப் டிரைவர்கள் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்களில் தான் பணியாற்றி வருகின்றனர். அதிலும் இவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலம் அல்லது வெளியூர்களில் இருந்து பெரு நகரங்களுக்கு வந்து தான் டாக்ஸி ஒட்டுகின்றனர்.

இப்படி ஆன்லைன் டாக்ஸி சேவையில் இருக்கும் டிரைவர்களில் 80 சதவீதம் பேர் வங்கியில் கடன் வாங்கித் தான் கார் ஒட்டுகின்றனர்.

பிரச்சனை

பிரச்சனை

கொரோனா தாக்கத்தால் தற்போது 90 சதவீத டிரைவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதில் பெரும்பாலான டிரைவர்கள் திரும்பப் பணிக்கு வருவது சந்தேகம் தான். தற்போதைய கணிப்பின் படி கிட்டதட்ட 30 முதல் 40 சதவீத டிரைவர்கள் பணிக்கு திரும்ப வரமாட்டார்கள் என் Meru கேப் நிறுவன தலைவர் நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

மாற்று வேலைவாய்ப்பு

மாற்று வேலைவாய்ப்பு

தற்போது டிரைவர்கள் நீண்ட காலம் சொந்த ஊரில் இருக்கும் சூழ்நிலை நிலவும் காரணத்தால் அவர்கள் வேறு வேலைக்குச் செல்ல அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இப்படியிருக்கையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தான் டாக்ஸ் வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக Meru கேப் நிறுவன தலைவர் நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

ஓலா

ஓலா

இந்தியாவில் தற்போது ஆன்லைன் டாக்ஸி, டூரிஸ்ட் டாக்ஸி, B2B டாக்ஸி ஆகிய பிரிவுகளில் சுமார் 10.1 லட்ச கேப்-கள் இயங்கி வருகிறது. இதில் ஓலா நிறுவனம் மட்டும் சுமார் 30 சதவீத கேப்களை வைத்து வர்த்தகம் செய்கிறது.

இந்நிலையில் இந்த 10.1 லட்ச கேப் டிரைவர்களுக்குக் கொடுக்க வங்கி கடன் மதிப்பு மட்டும் 30,000 கோடி ரூபாய்.

 

பிரச்சனை

பிரச்சனை

தற்போது டிரைவர்கள் பணிக்கு திரும்பவில்லை எனில் இந்த 30,000 கோடி ரூபாய் கடனுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டும், தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து சரிவர இயக்கவும் ஓலா நிறுவனம் டிரைவர்களின் கடனை வசூலிப்பதிலும், அவர்களுக்கு அதிகளவிலான தளர்வுகளைக் கொடுக்கவும் வங்கி அமைப்புகளிடம் டிரைவர்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதில் முக்கியமான ஒன்றாகக் கடனுக்கான ஈஎம்ஐ டிசம்பர் மாதம் வரையில் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளது.

 

வங்கிகள் நிலைப்பாடு

வங்கிகள் நிலைப்பாடு

ஆனால் சில வங்கிகள் கடனை செலுத்தாத கார்களை சீஸ் செய்து குறைந்த வெளிச் சந்தையில் விற்பனை செய்து கடன் தள்ளுபடி அல்லது தவாலாக அறிவிப்பதைத் தவிர்க்கவும் முடிவு செய்துள்ளது.

கேப் நிறுவனங்கள்

கேப் நிறுவனங்கள்

மேலும் கேப் நிறுவனங்கள் வீட்டில் முடங்கியிருக்கும் டிரைவர்களுக்குக் குறைந்தபட்சம் வருமானத்தையும், மெடிக்கல் இன்சூரன்ஸ்-ஐயும் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக உபர் நிறுவனம் டிரைவர்களைக் காப்பாற்ற சுமார் 25 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது.

இதேபோலே ஓலா டிரைவர்கள் தங்களது தினசரி தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்ள 50 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+