பிளிப்கார்டின் அதிரடி முடிவு.. யாரும் ஆபிஸ் வர வேண்டாம்.. 3 நாள் வீட்டில் இருந்தே வேலை பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டு நிறுவனம், கொரோனா வைரஸ் காரணமாக அதன் அலுவலகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

மேலும் கொரோனா வைரஸால் தனது ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க, பெங்களூரு ஊழியர்களை அடுத்த மூன்று நாட்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனத்தின் பெங்களுரில் உள்ள பெல்லந்தூர் அலுவகத்தில் சுமார் 8,000 - 10,000 ஊழியர்கள் பணி புரிந்து வருவதாகவும், அவர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து பணிபுரிய கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உறுதி செய்யவே இந்த பயிற்சி திட்டம்

உறுதி செய்யவே இந்த பயிற்சி திட்டம்

இது குறித்து வெளியான செய்தியில் இதுவரை பிளிப்கார்ட் நிறுவனத்தில் இதுவரை யாரும் கொரோனாவால் தாக்கம் அடையவில்லை. எனினும் பிளிப்கார்டின் முக்கியமான செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் அவசர காலங்களில் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்த பயிற்சியை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்

வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்

மேலும் தனது ஊழியர்கள் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களிடம் 14 நாட்கள் விலகி இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதாவது பதவியில் இருந்து விலகி இருக்க கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாம். மேலும் போன்பே குழுவின் ஊழியர்களில் பாதி பேர் வியாழக்கிழமை தொடங்கி, ஒரு வாராமாவது வீட்டிலிருந்து பணிபுரிய அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போன்பே தற்போது தனது அலுவலகத்தில் சுமார் 1,200 பேரைக் கொண்டுள்ளது.

ஊழியர்களிடம் கோரிக்கை
 

ஊழியர்களிடம் கோரிக்கை

எங்கள் மூலோபாய செயல்பாடுகளில் கோவிட் -19 போன்ற நிலைமைகளில் ஏற்படக்கூடிய அபாயங்களை மேற்கொள்ள வணிகத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள எப்படி செயல்படலாம் என திட்டமிடுகிறது. ஆக மேற்கூறிய இந்த சோதனை எங்களுக்கு கட்டாயமானது. அதனை செயல்படுத்த எங்களுக்கு உதவுவதில் உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் கோருகிறோம் என்று பிளிப்கார்ட் தனது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துங்கள்

டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துங்கள்

மேலும் பிளிப்கார்ட் தனது அலுவலக கூட்டங்களையும் மற்ற கடமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டாம். ஆனால் வழக்கமான வேலையை உறுதிப்படுத்த டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துமாறும் ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க செயல்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல் மற்றும் மைண்ட் ட்ரீயில் பாதிப்பு

டெல் மற்றும் மைண்ட் ட்ரீயில் பாதிப்பு

இந்த அதிரடி நடவடிக்கையானது டெல் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெல் ஊழியர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவர் எனவும், இதே மைண்ட் ட்ரீ ஊழியரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய ஊழியர்களூக்கு கொரோனா தாக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பரிந்துரை

ஊழியர்களுக்கு பரிந்துரை

இதே போல் பேடிஎம் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பதையடுத்து, குருகிராம் மற்றும் நொய்டாவில் உள்ள தனது அலுவலகத்தையே மூடியது பேடிஎம். இந்த நிலையில் அதே கட்டிடத்தை சேர்ந்த மற்றொரு நிறுவன உழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், காக்ணிசன்ட் நிறுவனம் தனது ஹைதராபாத் அலுவலகங்களையும் மூடியுள்ளது. இதே போல் டிசிஎஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய பரிதுரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus outbreak: Flipkart asked Bangalore employees to work from home for 3 days

Online retail firm Flipkart asked its Bangalore employees to work from home for three days.
Story first published: Thursday, March 12, 2020, 14:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X