இந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா 2வது அலை மூலம் நாட்டின் சப்ளையை விடவும் டிமாண்ட் அதிகமாகப் பாதிக்கப்படும் என்று கணித்துள்ளது, இதன் வாயிலாக வேலைவாய்ப்பில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் இறப்பு எண்ணிக்கை 4000த்திற்கும் அதிகமாகவே உள்ளது. இதுமட்டும் அல்லாமல் முதல் கொரோனா தொற்று அலையில் நாட்டின் கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளை அதிகளவில் பாதிக்காத கொரோனா 2வது அலையில் இப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.
2வது கொரோனா தொற்றுக் காலம்
2வது கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்பு மக்கள் மத்தியில் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் வர்த்தகச் சந்தையில் பொருட்களுக்கான டிமாண்ட் என்பது குறைவாகவே இருக்கும். மேலும் 2வது கொரோனா தொற்ற காலத்தில் தளர்வுகளுடன் தொழிற்சாலைகள் இயங்கும் காரணத்தால் போதுமான சரக்குக்கள் இருப்பு உள்ளது.
வேலைவாய்ப்புப் பாதிப்பு
இதனால் தொற்று குறைந்த பின்பு வர்த்தகச் சந்தைக்குத் தேவையான பொருட்களின் இருப்பு இருக்கும் காரணத்தால், உற்பத்தியும், வேலைவாய்ப்பு அடுத்த சில மாதங்களுக்குப் பாதிக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் வாயிலாகத் தெரிகிறது.
முதல் காலாண்டு
ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் கொகோனா தொற்று மூலம் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார நடவடிக்கை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பாதிப்பு கடந்த ஆண்டை போல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
தற்காலிகமானது
மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தற்காலிகமானது மட்டுமே, வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தாலும் 2020 ஆண்டுக் காலத்தைப் போல் இல்லை என்று நம்பிக்கையைக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
ஆன்லைன் வர்த்தகச் சேவைகள்
கொரோனா 2வது அலையில் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகச் சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஈகாமர்ஸ், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் போன்றவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் இப்பிரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications