டெல்லி: உலகினையே ஆட்டிப்படைத்து வரும் சீனாவில் பலிஎண்ணிக்கை 902ஐ தொட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் சுமார் 40,000 பேருக்கு மேல் இந்த கொடிய கொடூரமான வைரஸால் தாக்கப்பட்டுள்ளனராம்.
மிக வேகமாக பரவி வரும் இந்த கொடூர வைரஸ், சீனாவில் மட்டும் அல்லாது மற்ற உலக நாடுகளிலும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமையன்று மட்டும் கொரோனா வைரஸ் 100 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல் நாளுக்கு நாள் தாக்குதலும் அதிகரித்து கொண்டே போகிறது.
இந்தியாவுக்கு 17வது இடம்
சீனாவின் வுகான் மாநகரில் டிசம்பர் 2019ல் முதன் முதலாக தோன்றி இன்று உலகையே என்ன சேதி என்று கேட்டு வரும் கொரோனாவின் தாக்குதலுக்கு மத்தியில், கொரோனாவை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்கு 17வது இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்று பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்திராகாந்தி விமான நிலையம்
மேலும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மிக ஆபத்தில் உள்ள இடமாக உள்ளதாம். இதை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, பெங்களுரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சின் விமான நிலையங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணிக்கும் கொரோனா வைரஸ்
சர்வதேச அளவில் சாவகாசமாக பயணித்து வரும் கொரோனா வைரஸ், விமான பயணத்தினால் தான் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வில் கூறப்படுகிறது. 11 மில்லியன் குடியிருப்பாளர்களைக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய ஏழாவது நகரமான வுஹான் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னரே, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இணைக்கும் வுகான் விமான நிலையமாக இருந்தது.
விமான நிலையம் மூடல்
இதனாலேயே கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் பரவ இது வழி வகுத்தது. இதன் பின்னரே பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இணைக்கும் வுகான் விமான நிலையம் மூடப்பட்டது. எனினும் அதற்கு முன்பே கொரோனாவானது படையெடுத்து விட்டது. அந்த விமான தளத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே, இந்த தொற்றுதலும் அதிகரித்துள்ளது.
ஆபத்தில் முதல் 10 நாடுகள்
இப்படி தொற்றுதல் வாங்கிய நாடுகளில் இறக்குமதி செய்யும் அபாயத்தில் உள்ள முதல் 10 நாடுகள், பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், மற்றும் கம்பேடியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இதில் சந்தோசப்படக் கூடிய விஷயம் என்னவெனில் இந்தியா இந்த முதல் 10 லிஸ்டில் இல்லை என்பது கவனிக்கதக்கது.
சீனாவுக்கு பாதிப்பு அதிகம்
தாய்லாந்திற்கு தேசிய இறக்குமதி ஆபத்து 2.1% ஆக இருந்தாலும், இது இந்தியாவுக்கு 0.2% ஆக இருக்கும். இந்த கொரோனா வைரஸானது 2003ல் தாக்கப்பட்ட சார்ஸ் வைரசை விட மிக கொடூரமானது. சுமார் 20 நாடுகள் வழக்குகளை உறுதிப்படுத்தியிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் 99% பேர் சீனாவில் உள்ளனர்.
பொருளாதாரத்தில் பாதிப்பு
சீனாவில் இருந்து மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் சர்வதேச பொருளாதாரத்திலும் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications