தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் சேமிப்புத் திட்டம் ஆகும். ஓய்வு காலத்திற்காக சேமிக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் சேமித்து பலனடையலாம். EPF திட்டத்தைப் போலவே இதற்கும் நிறுவனத்தின் தரப்பிலும், அந்தந்த உறுப்பினரின் தரப்பிலும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
NPS திட்டம் "டிபைண்ட் காண்ட்ரிபியூஷன்" என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது நீங்கள் ஓய்வு பெறும்போது பெரும் பலன்கள், உங்களுக்கு கிடைக்கும் பணம் என்பது நீங்கள் எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்தீர்கள்? உங்கள் முதலீட்டின் கால அளவு, உங்கள் தரப்பில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது? உங்கள் நிறுவனத்தின் தரப்பில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது?, உங்கள் முதலீடுகளின் செயல்திறன் ஆகியவற்றையெல்லாம் பொறுத்தது. பணம் எந்த அளவுக்கு அதிகமாக முதலீடு செய்யப்படுகிறதோ? அந்த அளவுக்கு அதிக ஓய்வூதிய நிதி கிடைக்கும்.

ஒவ்வொரு NPS உறுப்பினருக்கும் ஒரு பர்மனன்ட் ரிட்டயர்மென்ட் அக்கவுண்ட் நம்பர் (PRAN) வழங்கப்படும். இது ஆதார் நம்பரை போலவே 12 இலக்க நம்பர் ஆகும். இது ஒவ்வொரு உறுப்பினருக்கும் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. மேலும் NPS கணக்கை நிர்வாகிக்க தனிப்பட்ட அடையாளமாக செயல்படுவது இந்த PRAN நம்பர் தான்.
ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறி வேறு நிறுவனத்திற்கு சென்றால் புதிய நிறுவனத்தின் பெயரில் அதே PRAN நம்பருடன் NPS திட்டத்தில் சேமிக்கலாம். இந்த PRAN நம்பரை வைத்தே புதிய நிறுவனத்திற்கு உங்களுடைய கார்பஸை மாற்றியமைக்கலாம். மேலும், எந்தவொரு ஊழியரும் 5 ஆண்டுகளுக்குள் நிறுவனத்தை விட்டு வெளியேறினால், நிறுவனத்தின் பங்களிப்பை NPS-இன் கீழ் பெற முடியாது.
NPS கார்ப்பரேட் மாடல் என்றால் என்ன?: PFRDA வலைத்தளத்தின்படி, NPS கார்ப்பரேட் மாடல் என்பது தங்கள் சொந்த நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக் கால சேமிப்பை வழங்க விரும்பும் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்டது. தங்கள் நிறுவனத்தில் ஓய்வூதிய நிதி தொடர்பான சிரமங்களை எளிதில் நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பும் நிறுவனங்கள் என்பிஎஸ் கார்ப்பரேட் மாடலைத் தேர்வு செய்யலாம். நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
கார்ப்பரேட் என்பிஎஸ் மாடலின் முக்கிய நன்மைகள் என்ன?: கார்ப்பரேட் என்பிஎஸ் மாடலில் சேர்ந்த ஊழியர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
நெகிழ்வான முதலீட்டு தேர்வுகள்: ஊழியர்கள் பல்வேறு ஃபண்ட் மேனேஜர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். அதோடு தாங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தாங்களே தேர்வு செய்யலாம். இவை கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். உங்கள் போர்போலியோவை நீங்களே நிர்வகிக்கலாம் அல்லது உங்கள் வயதை பொறுத்து உங்கள் முதலீடுகளை சரி செய்து முதலீடு செய்யும் ஆட்டோ சாய்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications