இந்திய பொருளாதாரத்தின் நிலை கொஞ்சம் மோசமாகத் தான் இருக்கிறது. இந்திய தொழில் துறை உற்பத்திகள் சரிந்து கொண்டு இருக்கின்றன.
அதே நேரத்தில், இந்தியப் பொருளாதாரத்தில் நுகர்வு குறைந்து இருப்பதால், வியாபாரமும் பெரிய அளவில் வளராமல் தேங்கிக் கிடக்கிறது.
இதற்கு எல்லாம் முத்து வைத்தாற் போல, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் குறியீடுகளில் ஒன்றான ஜிடிபி வளர்ச்சி, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 சதவிகிதம் மட்டுமே தொட்டு இருக்கிறது.
அட்வைஸ்
இந்தியாவின் இந்த நெருக்கடியான பொருளாதார சூழலில், பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காண என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். குறிப்பாக 2020 - 21 நிதி ஆண்டுக்கு வரப் போகும் பட்ஜெட்டைக் குறித்தும் பேசி இருக்கிறார். அப்படி என்ன சொல்லிவிட்டார்..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
இதெல்லாம் சரிப்படாது
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள் எல்லாம் போதும், இதற்கு மேல் அவர்களுக்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் நிறைய பணத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள் எனவும் சொல்லி இருக்கிறார் அபிஜித் பானர்ஜி.
ஏன் முதலீடு செய்யவில்லை
இந்திய சந்தைகளில் போதுமான டிமாண்ட் இல்லை. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க முடியாமல் கார்ப்பரேட் கம்பெனிகள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்தியாவில் தேவையை (டிமாண்டை) அதிகரிக்க வழி வகை செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
அதற்கு என்ன செய்யலாம்..?
இந்திய பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்க, ஏழை மக்கள் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். உண்மையாகவே பணக் கஷ்டம் இருக்கும், ஏழை மக்களிடம் பணத்தைக் கொடுத்தால் அவர்கள் அதை செலவழிப்பார்கள் எனச் சொல்லி இருக்கிறார். இதை தன் ஆய்விலும் பரிசோதித்துப் பார்த்து இருக்கிறாராம்.
விவசாயக் கடன்
இந்தியப் பொருளாதாரத்தில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது ஒரு நியாயமற்ற செயல் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு விவசாயக் கடன் தள்ளுபடி நடவடிக்கை பயன்பெறாத விஷயம் எனவும் சொல்லி இருக்கிறார். விவசாயக் கடன் வாங்கி இருப்பவர்களைத் தவிர மற்ற மக்களும் பயன் பெறும் விதத்தில் திட்டங்களை வகுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications