தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் முக்கியமானதாக இருக்கும் கோயம்புத்தூரில் அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வரும் வேளையில், புதிதாக ஒரு அமெரிக்க நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. உலகளாவிய டெக் நிறுவனங்களுக்கு கோயம்புத்தூர் மிகவும் விருப்பமான நகரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அனலிட்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான CorroHealth Infotech, கோயம்புத்தூரில் உள்ள இந்தியன் லேண்ட் டெக் பார்க்கில் தனது புதிய அலுவலகத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இப்புதிய அலுவலகத்தில் சுமார் 400 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோயம்புத்தூரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கோயம்புத்தூர் அலுவலகம் மூலம் CorroHealth Infotech நிறுவனத்தின் உலகளாவிய தடம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது, இதேபோல் கோயம்புத்தூரில் கிடைக்கும் திறமையான பணியாளர்கள் தான் இந்நிறுவனம் இங்கு அலுவலகத்தை அமைக்க முக்கியமான காரணமாக உள்ளது.
CorroHealth Infotech சுகாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி அனலிட்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனம், ஹெல்த்கேர் நிறுவனங்களுக்கு வருவாய் சுழற்சி மேலாண்மை, மருத்துவ பில்லிங் மற்றும் கோடிங் ஆகியவற்றில் புதுமையான தீர்வுகளை வழங்குகிறது.
மேலும் இந்தியன் லேண்ட் டெக் பார்க் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு முன்னணி டெக் பார்க் ஆகும். இது பல்வேறு டெக் நிறுவனங்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் அலுவலக வசதிகளை வழங்குகிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications