இந்திய மக்களுக்கு விலைவாசி உயர்வு பெரும் தலைவலியாக மாறியது மட்டும் அல்லாமல் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதியை விலைவாசி உயர்வுக்காக செலவிட வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியதால் நடுத்தர குடும்பங்கள் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் பணத்தை ஒதுக்க முடியாத நிலை உருவாக்கியுள்ளது. பல வீடுகளில் மாத கடைசியில் கடன் வாங்கி அடிப்படை செலவுகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த மோசமான நிலையில் டிவிட்டரில் இன்று MODIFLATION என்ற ஹேஷ்டேக் மூலம் விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சி உறுப்பனர்களில் இருந்து சாமானிய மக்கள் வரையில் அனல் பறக்கும் டிவீட்களை செய்து வருகின்றனர்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் வெஜ் மற்றும் நான் வெஜ் தாளி (Meals) விலை உயர்வு குறித்த ரிப்போர்ட்-ஐ Crisil Market Intelligence and Analytics வெளியிட்டு உள்ளது. பொதுவாக தாளி என்றால் அனைத்து வகையான உணவுகளும் இருக்கும், ஆனால் இங்கு மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகளை ஒரு தாளியாக வைத்துக்கொண்டு கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில் தாளி மீல்ஸ் விலை அக்டோபர் 2022 முதல் குறைந்து வரும் நிலையில் மே மற்றும் ஜூன் 2023 இல் சைவம் மற்றும் அசைவ தாளியின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி, பருப்பு வகைகள் மற்றும் முக்கிய தானியங்களின் விலை உயர்ந்து வருவதால், மாதாந்திர Crisil மீல்ஸ் விலை குறியீடு அதிகரித்துள்ளது.
கிரிசில் மதிப்பீட்டின்படி, ஒரு பிளேட் வெஜ் தாளி ஏப்ரல் மாதத்தில் 25.1 ரூபாயில் இருந்து ஜூன் மாதத்தில் 26.3 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், அசைவ தாளி மீல்ஸ் 58.3 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் இந்தியாவில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் உள்ளீட்டு விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சராசரி விலை.

முன்பு கூறியது போல் இந்த தாளி மீல்ஸ்-ல் நீங்கள் முன்னணி உணவகங்களில் சாப்பிடுவது போல் ஆடம்பரமான உணவுகள் இருக்காது, மக்களின் தினசரி தேவைக்கான அடிப்படை உணவின் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் சைவ மற்றும் சைவ தாளியின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
தக்காளி, மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது அனைவருக்கும் தெரியும், இதோடு பருப்பு வகைகளின் விலை ஜூன் மாதம் மாதாந்திர அடிப்படையில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது, கோதுமை மாவு விலை வருடாந்திர அடிப்படையில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. அரிசி விலை வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications