பண்டிகை காலம் நெருங்க நெருங்க மக்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மறு பக்கம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு என இரண்டுக்கும் மத்தியில் மத்திய அரசு எரிபொருள் மீதான வரியைக் குறைக்காமல் இருப்பது ஆகிய அனைத்தையும் சேர்த்து பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
33 பைசா உயர்வு
இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை இந்தியா முழுவதும் சராசரியாக லிட்டருக்கு 33 பைசா அதிகரித்துள்ளது.
100 ரூபாய் அளவீடு
ஒரு மாதத்திற்கு அதிகமான காலம் மத்திய அரசு அறிவித்து வரும் தொடர் பெட்ரோல், டீசல் உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து மாநில தலைநகரிலும் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் அளவீட்டையும், டீசல் விலை 12க்கும் அதிகமான மாநிலத்திலும் 100 ரூபாயைக் கடந்துள்ளது.
கங்காநகர்
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கும் கங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 118.23 ரூபாய், அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 109.04 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே கங்காநகர் பகுதியில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 21)
சென்னை - 103.61 ரூபாய், டெல்லி - 106.54 ரூபாய், கொல்கத்தா - 107.11 ரூபாய், மும்பை - 112.44 ரூபாய், பெங்களூர் - 110.25 ரூபாய், ஹைதராபாத் - 110.82 ரூபாய், கோழிக்கோடு - 107.02 ரூபாய், போபால் - 115.17 ரூபாய், இந்தூர்- 115.21 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 21)
சென்னை - 99.59 ரூபாய், டெல்லி - 95.27 ரூபாய், கொல்கத்தா - 98.38 ரூபாய், மும்பை - 103.26 ரூபாய், பெங்களூர் - 101.12 ரூபாய், ஹைதராபாத் - 103.94 ரூபாய், கோழிக்கோடு - 100.77 ரூபாய்.
கச்சா எண்ணெய் விலை
இன்று காலை வர்த்தகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 0.02 சதவீதம் அதிகரித்து 83.44 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.15 சதவீதம் அதிகரித்து 85.69 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications