உத்திரப்பிரதேச அரசு, பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை கருத்தில் கொண்டு, பிரியாக்ராஜ் கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கம் புனித நீரை மாநிலம் முழுவதும் வழங்க முடிவுசெய்துள்ளது. இதன் மூலம், நேரில் கும்பமேளா வந்து புனித நீராட முடியாத பக்தர்களும், இந்த புனித நீரை வீடுகளிலேயே பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் 31,000 லிட்டர் திரிவேணி சங்கம் நீர் வழங்கப்படும். முதற்கட்டமாக நொய்டா நகரத்திற்கு 10 லிட்டர் புனித நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மூலம் பக்தர்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கும்பமேளா என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக விழாக்களில் ஒன்று. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரியாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு புனித நகரங்களில் நடைபெறுகிறது. பிரியாக்ராஜ் திரிவேணி சங்கம் என்பது மிகுந்த புனிதம் வாய்ந்த இடம். இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இங்கே நீராடுவதால் பாவங்கள் தீரும், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
எனவே, லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று இந்த புனித நீரில் நீராட விரும்புகிறார்கள். ஆனால், பலருக்கு நேரில் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. இதை கருத்தில் கொண்டு, உ.பி. அரசு இந்த புனித நீரை பக்தர்களின் வீட்டிலேயே கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 31,000 லிட்டர் திரிவேணி சங்கம் நீர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மூலம் உ.பி. மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த திட்டத்தின் செயல்பாடு முதலில் நொய்டா நகரத்திற்கு 10 லிட்டர் புனித நீர் அனுப்பப்பட்டுள்ளது. பக்தர்கள் பயன்பெற தனியாக ட்ரம்களில் சேமித்து வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சிறப்பு வாகனங்கள் மூலம் புனித நீர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. இது மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் வழிநடத்துதலில் வழங்கப்படும்.
நீர் வழங்கப்படும் இடங்கள் முக்கிய பகுதிகளில் அமைக்கப்படும். பக்தர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே புனித நீரை பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த திட்டத்தை வரவேற்கின்றனர். கும்பமேளா நேரில் சென்று நீராட முடியாதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நொய்டா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, என்பவர் "இந்த ஆண்டு கும்பமேளா செல்ல முடியவில்லை. ஆனால், திரிவேணி சங்கம் நீரை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி." என்று கூறியுள்ளார். மற்றும் லக்னோவில் வசிக்கும் சுமித்ரா தேவி, என்பவர் "கும்பமேளா வருகை எடுக்க முடியவில்லை. ஆனால், இந்த புனித நீரை வீட்டில் வைத்து வழிபட முடியும். இது ஓர் அரிய வாய்ப்பு." என்று கூறியுள்ளார்.
உ.பி. அரசு பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளை ஆன்மிக பணிக்காக பயன்படுத்துதல், பக்தர்கள் வசிக்கும் பகுதிகளில் திரிவேணி சங்கம் நீர் வழங்கப்படும் மையங்கள் அமைத்தல் மற்றும் திரிவேணி சங்கம் நீரை பாதுகாத்து வழங்கப்படும் முறைகள் செயல்படுத்துதல், தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் பல நடைமுறைகளை செயல் படுத்தி கொண்டு வருகிறது.
இந்த திட்டம் மாநிலம் முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில், இதை மேலும் விரிவுபடுத்தி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அரசு முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications