அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவு சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்று இருக்கும் டிரம்ப் தொடர்ந்து அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் . அந்த வகையில் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை அதிகமாக்கி வருகிறார். இந்த நிலையில் தான் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

இதனால் அமெரிக்காவில் இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும் எனவே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் உள்ளூரில் எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து இவற்றை கொள்முதல் செய்ய தொடங்குவார்கள் என்பதால் உள்நாட்டு தொழில் வளர்ச்சி அடையும் என டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஆனால் டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான வர்த்தக போக்கையே மாற்றி அமைக்கும் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான எஃகு அதன் அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் இருந்தும் இறக்குமதி செய்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக சீனா இருந்தாலும் அந்த நாடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய எஃகின் அளவு குறைவுதான். 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகிற்கு 25% வரி விதித்ததால் சீன நிறுவனங்கள் அமெரிக்க சந்தையை விட்டு வெளியேறி விட்டன.
அமெரிக்கா பெரும்பாலும் அலுமினியத்திற்கு வெளிநாடுகளை தான் நம்பி இருக்கிறது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட அலுமினியம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கனடாவில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 3.2 மில்லியன் டன்கள் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 3.47 லட்சம் மெட்ரிக் டன்களும், சீனாவில் இருந்து 2.22 லட்சம் மெட்ரிக் டன்களும் இறக்குமதி
டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிலும் சற்றே பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யக்கூடிய முன்னணி நாடுகளில் இந்தியா இல்லை என்றாலும், இந்தியாவிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 2 லட்சம் மெட்ரிக் டன் எஃகு
அதேபோல 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவிலிருந்து 1.60 லட்சம் மெட்ரிக் டன் அலுமினிய பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இரும்பு ,எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதியில் அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாக பார்க்கப்படுகிறது. இந்த இறக்குமதி வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு இந்திய தொழில்களையும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications