சென்னை: ஒவ்வொரு நாட்டின் பணத்திற்கும் அதற்கேற்றவாறு ஒவ்வொரு மதிப்பு இருக்கும் அதன்படி அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 83 ரூபாயாக உள்ளது. அதேபோல குவைத் நாட்டின் ஒரு தினாருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 271 ரூபாய். பக்ரைன் நாட்டின் ஒரு தினாருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 221 ரூபாய். நீங்கள் நினைக்கலாம் என்ன இந்திய ரூபாய் மதிப்பை விட பிற நாடுகளின் ரூபாய் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்று.. சில நாடுகளில் நாணயங்கள், இது போன்ற அதிக ரூபாய் மதிப்புடன் இருந்தாலும், சில நாடுகளின் பண மதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பை விட குறைந்தே உள்ளது. அந்த வகையில் நம் நாட்டின் 1 ரூபாய்க்கு அதிக மதிப்பு இருக்கும் பிற நாட்டைப் பற்றி பார்ப்போம்.
இரு நாடுகளுக்கு இடையிலான பணமாற்று விகிதம், பொருளாதார நிலைமைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், பணவீக்க விகிதங்கள், வட்டி விகிதங்கள், வர்த்தக நிலவரங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைப் பொறுத்தது. இந்திய ரூபாய்க்கு அதிக பண மதிப்பு விகிதம் இருக்கும் பிற நாடுகளின் பட்டியலைப் பற்றி பார்ப்போம்.

ஈரான்: இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு இருக்கும் நாடுகளில் முதலிடத்தில் ஈரான் உள்ளது. இந்திய நாணயத்தின் ஒரு ரூபாய் ரூ. 507.22 ஈரானிய ரியாலுக்கு சமம். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஈரானின் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளது. இதனால் ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாகவும் அந்நாட்டின் பொருளாதாரம் சரிய தொடங்கியது.. இந்திய ஒருவர் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 ஆயிரம் வரை வைத்திருந்தால் ஈரானில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்கு வந்துவிடலாம். அதேபோல ஈரானில் அமெரிக்க டாலரை வைத்திருப்பது மிகப்பெரிய குற்றமாக கூறப்படுகிறது.
சியரா லியோன்: சியேரா லியோனிக் குடியரசு (Republic of Sierra Leone) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆப்பிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கினிவும், தெற்கே லைபீரியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. இந்த நாட்டிலும் இந்திய மதிப்பின் 1 ரூபாய் அந்நாட்டின் ரூ. 238.32 ரூபாய்க்கு சமம்.
வியட்நாம்: இந்திய ரூபாய்க்கு உயர் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு நாடு வியட்நாம் இது மிகவும் அழகிய நாடாக அறியப்படுகிறது. வியட்நாமின் ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 306.22 வியட்நாமிய டாங்-கிற்கு சமம்.
உஸ்பெகிஸ்தான்: இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் மற்றொரு நாடு உஸ்பெகிஸ்தான். மத்திய ஆசியாவின் இந்த பகுதி இஸ்லாமிய கலை மற்றும் மசூதிகளுக்கு பெயர் பெற்றது. உஸ்பெகிஸ்தான் ஒரு வளமான கலாச்சார வரலாறு நிறைந்த நாடு உஸ்பெகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 152.78 உஸ்பெகிஸ்தானி சோம்-இற்கு சமம்.


Click it and Unblock the Notifications