இன்றைய உலகம் புதுமைகளுக்கும், சுயதொழில்களுக்கு பெரும் வாய்ப்புகள் தரும் ஒரு சூழ்நிலையாக மாறியுள்ளது. அந்த வகையில், மும்பையில் வசிக்கும் அகில் - ஷ்ரியா தம்பதியினர் தோசை விற்பதன் மூலம் மாதந்தோறும் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, எம்.பி.ஏ., இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதியினர் தரமான சாப்பாடு, சுத்தம், வாடிக்கையாளர்களிடம் பழுகும் விதம், சரியான வணிகத் திட்டம், சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தல் ஆகியவற்றால் வெற்றி பெற்றுள்ளனர்.
வாழ்க்கைக்கு பட்டம், படிப்பு இருந்தால் நல்லது தான். ஆனால், உண்மையான வெற்றிக்கு உழைப்பு, நம்பிக்கை, வாடிக்கையாளர்களை புரிந்துகொள்வது, சந்தையை சரியாக கையாள தெரிய வேண்டும் என்று தம்பதியினர் கூறுகின்றனர். சோசியல் மீடியாவில் இவர்களின் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "நாங்கள் ஊதிய உயர்வுக்காக காத்திருக்கிறோம்.. இ.எம்.ஐ.யின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால், இந்த தம்பதியினர் தோசையை திருப்பிப் போட்டு மாதம் ரூ.1 கோடி சம்பாதிக்கிறார்கள்" என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு பயனர், "நாம் அலுவலகத்தில் increment எப்போது வரும் என்று காத்திருக்கும் நேரத்தில் இந்த தம்பதியினர் street food வியாபாரம் செய்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
இந்த தம்பதியினர் முதலில் சாதாரண தோசை, சாம்பாரை வைத்து தான் வியாபாராம் செய்து வந்தனர். பிறகு பட்டர் நிறைந்த பெனே (Bene Dosa) தோசையை அறிமுகம் செய்தனர். தென்னிந்தியாவில் இருக்கும் சிறந்த உணவுகளை கண்டுபிடித்து அதை மும்பை மற்றும் இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளனர். இப்போது பெரும்பாலானோர் இந்த பெனே தோசையைத்தான் விரும்பி சாப்பிடுவதாக தம்பதியினர் கூறுகின்றனர்.
நாம் எல்லாம் "இட்லி, தோசை, சாம்பார், சட்னி" என சின்ன ரீல்ஸ் வீடியோக்கள் மட்டும் போஸ்ட் செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் வேறு மாதிரி வீடியோ போட்டுள்ளனர். தங்கள் உணவகத்தின் வளர்ச்சியை இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய கதையாக சொல்லி, இவர்களின் பயணத்தை ஒரு வெப் சீரிஸ் போல பகிர்ந்து, மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கினர். இவர்கள் உணவகத்தை திறப்பதற்கு முன்பே மக்கள் இதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். சிலர் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். ஒரு உணவகத்தை பெரிய கதையாக கூறி, பிரமிப்பூட்டும் நிகழ்வாக மாற்றியதால், மக்கள் மத்தியில் இது மிகவும் பிரபலம் ஆனதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,
மேலும், இந்த உணகத்தில் டிஜிட்டல் ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்காமல், தங்களுக்கு தேவையான உணவினை இதன் மூலம் மிகவும் சுலபமாக ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், இந்த தம்பதியினர் open kitchen வைத்தும் நடத்தி வருகின்றனர். அதாவது, தோசை எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை வாடிக்கையாளர்கள் நேரில் பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications