இந்திய சைபர் கிரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தற்போது புதிதாக கூரியர் மோசடி நடந்து வருகிறது. இந்த மோசடி மூலம் பலர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளனர்.
ஒருபக்கம் திருடர்களிடமும், மோசடியாளர்களிடமும், இருந்து தப்புவதற்கு மக்களும், அரசும் பல முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், மோசடியாளர்கள் புது புது ஐடியாக்களை கண்டுப்பிடித்து மோசடி செய்கிறார்கள். இப்புதிய மோசடி எப்படி நடக்கிறது..? மக்கள் இதில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்..?

பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் பிஹெச்டி மாணவராக இருப்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் பிரபல FedEx நிறுவனத்தின் அதிகாரி போல் போனில் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட முகவரியில் இருக்கும் அந்த பெண்ணுக்கு சட்டவிரோத பொருட்கள் கூரியரில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து FedEx ஊழியர் உயர் அதிகாரிகளுக்கு இணைப்பதாக கூறி Mumbai Narcotics Division-க்கு வெரிபிகேஷ் செய்வதற்காக அனுப்பி பேசினார்கள். பின்பு Skype காலில் இணைக்க சொல்லி சிபிஐ, ஆர்பிஐ-க்கு இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அழைத்துள்ளனர். இதற்கிடையில் இந்த பெண்ணின் வங்கி கணக்கு விபரங்களை முழுமையாக வாங்கியுள்ளனர்.
இந்த ஸ்கைப் காலில் Mumbai Narcotics Division அதிகாரி என பேசிய நபர், இந்தியாவில் தன்னை MDMA சப்ளை செய்வதாக குற்றம்சாட்டி மிரட்டி பணம் பரிந்துள்ளார். இந்த மிரட்டலுக்கு பயந்து 1,34,650 ரூபாய் தொகையை அப்பெண் அனுப்பியுள்ளார்.
இதுபோன்று மும்பையில் ஒரு ஐடி ஊழியர் 1.97 லட்சம் ரூபாயும், டெல்லியில் டாக்டர் ஒருவர் 4.47 கோடி ரூபாயும் இழந்துள்ளார். ஜூன் 23 ஆம் தேதி Zerodha சிஇஓ நித்தின் காமத் டிவிட்டரில் இதுக்குறித்து ட்வீட் செய்திருந்தார்.
கூரியர் மோசடியில் மோசடியாளர்கள் இளம் தலைமுறையினரை டார்கெட் செய்து பெரிய பெரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி பயமுறுத்தி பேசுவார்கள், இதனால் பயத்தில் அவர்கள் சொல்லும் அனைத்தையும் செய்து விடுகிறார்கள்.

இதிலிருந்து தப்பிக்க முதலில் இதுப்போன்ற அழைப்பு வரும் வேளையில் பதறாமல் உங்கள் மீது குற்றம் ஏதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு முறையாக நோட்டீஸ் அனுப்ப கூறுங்கள், அல்லது அருகில் இருக்கும் காவல் நிலைய அதிகாரிகள் உதவியுடன் இத்தகைய அழைப்புகளை கையாளுங்கள்.
முக்கியமாக ஆதார், வங்கி கணக்கு, பான் எண், முக்கியமான பர்சனல் டேட்டா என எந்த விபரத்தையும் அளிக்காதீர்கள். இத்தகையை மோசடியை நீங்கள் எதிர்கொண்டால் உடனே 155260 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தில் சைபர் புகார் அளித்துவிடுங்கள். இல்லையெனில் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்திடுங்கள்.


Click it and Unblock the Notifications