சென்னை நுங்கம்பாக்கத்தில் வீடு கட்டித் தருவதில் அதிக காலதாமதம் செய்த காரணத்தால் இருவருக்கு தலா ரூ. 8.5 லட்சம் இழப்பீடு வழங்க என்று சென்னை நுகர்வோர் குறை தீர்க்கும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சேவையில் குறைபாடு இருந்ததற்காக (வீடுகளைச் சரியான நேரத்தில் ஒப்படைக்காதது) கூடுதலாக தலா ரூ. 30,000 வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கட்டுமான நிறுவனங்களின் காலதாமதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சி.கே. சம்பத் மற்றும் கே. சுதர்சனம் ஆகியோர் 'பூமி அண்ட் பில்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற கட்டுமான நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன்படி, இவர்களின் பழைய வீட்டை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக நவீன அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும். இந்த ஒப்பந்தம் நவம்பர் 2016-இல் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கட்டுமான நிறுவனம் 3 மாத அவகாசத்துடன் சேர்த்து, மொத்தமாக 18 மாதங்களுக்குள் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். அதாவது, 2018-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வீடு தயாராகியிருக்க வேண்டும். ஆனால், புகார்தாரர்கள் தங்கள் பழைய சொத்தை ஏப்ரல் 1, 2019 அன்று ஒப்படைத்த நிலையில், அவர்களுக்குப் புதிய குடியிருப்புகள் கிடைத்தது ஜூன் 1, 2024 அன்றுதான். அதாவது 5 ஆண்டுகள் தாமதம் ஆகியுள்ளது.
நிறுவனம் சார்பில் காலதாமதத்திற்கு காரணம் கூறப்பட்டாலும், ஒப்பந்தப்படி, தாமதம் ஏற்பட்ட ஒவ்வொரு மாதத்திற்கும் தலா ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று புகார்தாரர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். கோவிட்-19 நோய் பரவலால் ஏற்பட்ட பொது முடக்க நாட்களை கழித்தாலும், கிட்டத்தட்ட 32 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கணக்கிட்டனர். அதன்படி, தலா ரூ. 16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் தலைவர் டி. கோபிநாத் தலைமையிலான நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களையும் கேட்டனர். ஆவணங்களில் இருந்த சிக்கல் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது என்ற நிறுவனத்தின் வாதத்தையும், கொரோனாவால் ஆல் ஏற்பட்ட காலதாமதத்தையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.
17 மாத தாமதத்திற்கு ரூ. 17 லட்சம் அபராதம் : கட்டுமான நிறுவனம் குறிப்பிட்டபடி நிலம் ஒப்படைக்கப்பட்ட தேதி, மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட 21 மாத கால தாமதத்தை (ஏப்ரல் 1, 2020 முதல் டிசம்பர் 31, 2021 வரை) ஒதுக்கி வைத்தது. அதன் பிறகு, குடியிருப்புகளை ஒப்படைத்ததில் ஏற்பட்ட உண்மையான தாமதம் 17 மாதங்கள் என்று கணக்கிடப்பட்டது.
ஒரு மாத தாமதத்திற்கு ரூ. 50,000 என்ற ஒப்பந்தத்தின்படி, 17 மாதங்களுக்கு தலா ரூ. 8.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், சேவை குறைபாட்டிற்காக இருவருக்கும் தலா ரூ. 30,000 சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு காலதாமதம் செய்யும் கட்டுமான நிறுவனங்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications