இந்தியாவின் நிலை பல நாடுகளுக்கு எச்சரிக்கை.. ஐஎம்எப் அதிரடி கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவைப் புரட்டிப்போட்டு வரும் கொரோனா தொற்றின் 2வது அலையில் பல உயிர்களை இழந்த வரும் மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்தியா இன்னும் மோசமான நிலையை அடைவதற்கான சாத்தியக்கூர்கள் அதிகமாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

 

வருமான வரி தாக்கல் செய்ய 'புதிய' இணையதளம்.. ஜூன் 7 அறிமுகம்.. அப்படி இதில் ஸ்பெஷல்..?!

இதேபோல் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் இந்தப் பாதிப்பு இதுநாள் வரையில் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து தப்பித்து வந்த பல குறைந்த மற்றும் நடுத்தரப் பொருளாதார நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஐஎம்எப் அமைப்பு

ஐஎம்எப் அமைப்பு

ஐஎம்எப் அமைப்பின் பொருளாதார வல்லுனர் ருசிர் அகர்வால் மற்றும் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் ஆகிய வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2021ஆம் ஆண்டின் முடிவிலும் இந்தியாவில் 30 சதவீத மக்கள் மட்டுமே வேக்சின் பெறக்கூடும் கணித்துள்ளது.

இந்தியாவில் மோசமான நிலை

இந்தியாவில் மோசமான நிலை

பிரேசில் நாட்டின் ஏற்பட்ட மோசமான நிலைக்குப் பின்பு இந்தியாவின் 2வது கொரோனா அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியா இன்னும் மோசமான நிலையை எதிர்கொள்ளவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. ஐஎம்எப் கிட்டதட்ட Winter is coming என்பதுபோல் எச்சரித்துள்ளது.

கொரோனா 2வது அலை
 

கொரோனா 2வது அலை

இந்தியாவில் கொரோனா முதல் அலையை இந்திய மருத்துவத் துறை மிகவும் சிறப்பான முறையில் கையாண்டு வெற்றிபெற்ற நிலையில், 2வது அலையில் மக்களுக்குப் போதிய மருத்துச் சிகிச்சை அளிப்பதற்கான தளமும், ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கை எனப் பலவற்றுக்கும் அதிகளவிலான பற்றாக்குறை எதிர்கொண்டு பல உயிர்களை இழந்துள்ளோம்.

நடுத்தரப் பொருளாதார நாடுகள்

நடுத்தரப் பொருளாதார நாடுகள்

இந்தியாவில் நடக்கும் இந்தப் பாதிப்புகள் குறைந்த மற்றும் நடுத்தரப் பொருளாதார நாடுகளிலும் இது நடக்கும், எனவே இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐஎம்எப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேக்சின் கட்டாயம்

வேக்சின் கட்டாயம்

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் 60 சதவீத மக்களுக்குக் கொரோனா வேக்சின் மூலம் பாதுகாப்பு அளிக்க உடனடியாக 1 பில்லியன் வேக்சினை வாங்க வேண்டும், இதுமட்டும் அல்லாமல் அதிகளவிலான தொகையை மருத்து துறையை மேம்படுத்த முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஐஎம்எப் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: imf report covid
English summary

COVID-19 Crisis In India A Warning For Other Middle-Income Nations: IMF

COVID-19 Crisis In India A Warning For Other Middle-Income Nations: IMF
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X