கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கியமானது MSME, ஒருப்பக்கம் வர்த்தகம் இல்லாமலும், தொழிற்சாலைகளை மூடப்பட்டும் பாதிக்கப்பட்டு இருந்த MSME நிறுவனங்கள் மறுப்புறம் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தொழிற்சாலைகளை மூட வேண்டிய மோசமாக நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க MSME நிறுவனங்கள் அதிகளவில் மூடப்பட்டதும் முக்கியக் காரணமாகும்.
MSME நிறுவனங்கள்
இந்தியாவில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட MSME நிறுவனங்களின் எண்ணிக்கையை நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆன்லைனில் சர்வே மூலம் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சுமார் 9 சதவீத MSME நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அனுப்பிய கேள்விக்கு நாராயண் ரானே பதில் அளித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 32 மாநிலத்தில் சுமார் 5744 MSME நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆன்லைன் சர்வேயில் 91 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வந்தது, மீதமுள்ள 9 சதவீத நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக் காரணமாக மூடப்பட்டு உள்ளது இந்தச் சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.
MSME நிறுவன உரிமையாளர் மரணம்
மேலும் நாடாளுமன்றத்தில் MSME நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிகளவில் மரணம் அடைவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நாராயண் ரானே கூறுகையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரவுகள் அடிப்படையில் 2019ல் 9,052 MSME நிறுவன உரிமையாளர்களும், 2020ல் 11,716 MSME நிறுவன உரிமையாளர்களும் மரணம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
கடன் திட்டம்
MSME துறை நிறுவனங்களைக் காப்பாற்றவும், உதவ வேண்டும் என்பதற்காகவும் அரசு 2.82 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் திட்டத்தை MSME நிறுவனங்களுக்கெனப் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலம்
கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர கடன் வரி உத்தரவாத திட்டம் வாயிலாகக் கடன் பெற்ற நிறுவனங்aகளில் 29 சதவீதம் MSME நிறுவனங்கள் என மத்திய அமைச்சர் நாராயண் ரானே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications