2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்காகப் பல்வேறு ஊக்கத்திட்டங்களை ஏற்கனவே அதிகளவில் அறிவித்துள்ள நிலையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அதிகளவிலான அறிவிப்புகள் தனிநபர் சார்ந்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை அதிகமாக இருக்கும் என ஒரு தரப்பு விவாதம் செய்து வரும் நிலையில், மறுபுறம் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தால் வருமான வரியில் எவ்விதமான சலுகையும் இருக்காது எனக் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு நிதியியல் சலுகை அளிக்கும் விதமாகக் கொரோனா சிகிச்சைக்காகச் செலவு செய்த தொகைக்கு வருமான வரிச் சலுகை இந்தப் பட்ஜெட்டில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தச் சலுகை பெற கொரோனா சிகிச்சை பெற்ற நபர் எவ்விதமான ஹெல்த் இன்சூரன்ஸ்-ம் பெற்று இருக்கக் கூடாது என்பது முக்கிய விதிமுறையாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் அறிக்கை தயாரிப்புப் பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே வருவாய்த் துறைக்குக் கொரோனா சிகிச்சைக்காகச் செலவு செய்த தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 80DD, 80U, 80DDB பிரிவின் கீழ் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்தக் கொரோனா காலத்தில் PM CARES திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய தொகைக்கு 80G பிரிவின் கீழ் 100 சதவீதம் வரிச் சலுகை உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications