இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஐந்து மாத உச்சத்தை தொட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி மொத்தம் 2,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்பு தற்போது, இந்த அளவீட்டை நெருங்கியுள்ளது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 1,573 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மொத்த ஆக்டிவ் தொற்று எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்த நிலையில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,848 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 7 இறப்புகளில் 3 பேர் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் 3 பேர் என இறந்துள்ளனர்.
கோடை விடுமுறை
இந்தியாவில் பள்ளி பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் வேளையில், கொரோனா தொற்று எண்ணிக்கையில் 5 மாத உயர்வு என்பது சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் 2வது கோடை விடுமுறை என்பதால் இந்தியா முழுவதும் சுற்றுலா துறையை சார்ந்த நிறுவனங்கள், அதிலும் முக்கியமாக மலை பிரதேசங்களில் இருக்கும் ஹோட்டல், ஹாஸ்பிடாலிட்டி நிறுவனங்கள் பலத்த ஏற்பாடு உடன் சுற்றுலா செல்ல தயாராகி வருகிறது.
பின்னடைவு
கொரோனா தொற்று காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கியமானது ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை தான். இந்த நிலையில் கோடை விடுமுறை இப்பிரிவுக்கு மிகவும் முக்கியமான வர்த்தக காலக்கட்டமாக இருக்கும் வேளையில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாற்றம்
இதே வேளையில் அடுத்த 2 முதல் 4 வாரத்தில் கொரோனா தொற்று குறைந்துவிட்டால் நிலைமை சீராகிவிடும். ஆனால் விடுமுறை காலம் என்பதால் பொதுவெளியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் Hospitality துறைக்கு இது சவால் மிகுந்த கோடை காலமாக மாற வாய்ப்புள்ளது.
5 மாத உச்சத்தில் கொரோனா
கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் 5 மாத உச்சத்தை தொட்டு உள்ள வேளையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கோவிட்-19 மற்றும் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட மருத்துவமனை தயார் நிலைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு கேட்டறிந்துள்ளது.
மருந்து விலை
இதேவேளையில் ஏப்ரல் 1 முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மாறுபட்ட பார்முலேஷன் கொண்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயர உள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையாக மாறக்கூடும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications