சீனா பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.
இதேவேளையில் 2 முறை என 10 வருடங்கள் தொடர்ந்து சீன அதிபராக இருந்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 3வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த உடனே நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் பணிகளைச் செய்வார், தைவான் உடனான பிரச்சனைக்கு முடிவு கட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் வுஹானில் மீண்டும் கொரோனா பரவியுள்ள செய்தி மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கொரோனா தொற்று
தீபாவளி பண்டிகைக்குப் பின்பு இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருந்தாலும் மக்கள் அச்சுறுத்தும் வகையில் என்பதால் மத்திய மாநில அரசுகள் எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் உள்ளது.
தடுப்பூசி பாதுகாப்பு
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்குக் கோவிட்கிடைத்துள்ள நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் சிறிய அளவு அதிகரித்தாலும் எவ்விதமான அச்சமும் இல்லாமல் தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உள்ளது, ஆனால் சீனாவில் நிலைமை அப்படியில்லை.
ஜீரோ கோவிட் பாலிசி
கொரோனா தொற்று எண்ணிக்கை உலக நாடுகளில் குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் சீனாவில் மட்டும் இன்னும் கொரோனா தொற்று உச்சம் தொட்டு இருந்த காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த ஜீரோ கோவிட் பாலிசி இன்னும் தொடரப்பட்டு வருகிறது.
சீனா
கடந்த 4 வாரத்தில் சீனாவில் மேற்கு பகுதியில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அடுத்தடுத்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சீனாவில் நீண்ட விடுமுறைக் காலத்தில் மக்கள் அதிகளவில் பயணம் செய்துள்ள நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வுஹானில் மீண்டும் கொரோனா
இந்த நிலையில் கொரோனா தொற்றின் GROUND ZERO ஆகக் கூறப்படும் வுஹானில் மீண்டும் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் சீன அரசு தனது கடுமையான ஜீரோ கோவிட் பாலிசியை நடைமுறைப்படுத்தித் தொற்று இருக்கும் மாநிலத்தை மொத்தமாக லாக்டவுன் செய்துள்ளது.
லாக்டவுன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியதாகக் கூறப்படும் வுஹான் பகுதியில் 3 வருடத்திற்குப் பின்பு கொரோனா தொற்று பாதிப்பால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
Hanyang மாவட்டம்
வுஹான் மாகாணத்தில் Hanyang என்ற மாவட்டத்தில் தான் தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுச் சுமார் 9 லட்சம் குடும்பங்கள் கொண்ட மாவட்டத்தை மொத்தமாக லாக்டவுன் செய்யப்பட்டு உள்ளது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
இந்த லாக்டவுன் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரையில் தொடரும் என்றும் அதுவரையில் மக்களுக்கு அடிப்படைத் தேவைக்கான கடைகள் மற்றும் சேவைகள் மட்டுமே கிடைக்கும், மற்ற அனைத்து கடைகளும், அமைப்புகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
சுற்றுலா துறை பாதிப்பு
Hanyang மாவட்டத்தில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சுற்றுலா தளங்கள் இருக்கிறது, தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். செவ்வாய்க்கிழமை வெளியான தரவுகள் படி சீனாவின் வுஹான் மாகாணத்தில் சுமார் 18 பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீன அரசு
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் சீன அரசுக்குக் கொரோனா கட்டுப்படுத்த ஜீரோ கோவிட் பாலிசி பெரிய அளவில் நன்மை அளித்தது உண்மை தான்.
ஜி ஜின்பிங்
ஆனால் தற்போது தடுப்பூசி முன்னெச்சரிக்கை, தேவையான மருத்துவச் சிகிக்சை வசதிகள் இருக்கும் போதும் சிறிய அளவிலான தொற்று எண்ணிக்கை பாதிப்பிற்கும் ஜீரோ கோவிட் பாசிலி என்பது அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், மக்களின் வருமானம் என அனைத்தையும் பாதிக்கிறது. இது பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்ட நிலையிலும் ஜி ஜின்பிங் 3வது முறையாகச் சீன அதிபர் பதவி பெற்றுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications