இந்திய ரிசர்வ் வங்கி செய்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்-ல் இந்திய வங்கிகளில் போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதாகவும், தற்போதைய அளவீட்டை விடமும் மிகவும் மோசமான நிலை உருவானாலும் வங்கிகளில் அதைச் சமாளிக்கும் அளவிற்குப் போதுமான நிதி உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் பொருளாதாரத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகளை ஆய்வு செய்த போது, நாட்டின் வளர்ச்சி அளவீட்டு நாட்டில் எவ்வளவு விரைவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்குப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் வளர்ச்சி நுகர்வோர் அளவீடு எந்த அளவிற்கு வேகமாக வளர்கிறதோ அந்த அளவிற்குச் சந்தையில் அதிக முதலீடுகள் குவியும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நுகர்வு அளவீட்டை எப்படி அதிகரிப்பது.. யாரிடம் காசு இருக்கு என்ற கேள்வியும் இதனுடன் எழுகிறது.

இதனுடன் சேவைத் துறையில் பல முக்கியத் துறைகள் வர்த்தகங்கள் கொரோனா தொற்று குறைந்த சில காலத்திற்கு மந்தமாகவே இருக்கும், குறிப்பாக விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறை, ஹாஸ்பிடாலிட்டி துறை போன்றவை வளர்ச்சி அடைய சில காலம் தேவைப்படும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் வேகமெடுக்கும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிகளவிலான வளர்ச்சி அடைய முடியும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்தையும் தாண்டி முதல் கொரோனா அலையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விடவும் 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறைவு எனத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications