இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா-வின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான சிபி குர்னானி டிசம்பர் 21 ஆம் தேதி உடன் இந்நிறுவன பணி, நிர்வாகக் குழு என அனைத்துப் பதவி, பொறுப்புகளிலும் இருந்து விலகுகிறார்.
டிசம்பர் 19 ஆம் தேதி அவருடைய பிறந்தநாள்-ஐ சிறப்பாகக் கொண்டாடும் வகையில் டெக் மஹிந்திராவில் அவர் பணியாற்றிய 19 வருடத்திற்கு நினைவாக 19 கிப்ட்-களைக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் டெக் மஹிந்திராவின் சிஇஓ-வாக மோஹித் ஜோஷி பதவியேற்க உள்ளார்.

சிபி குர்னானி-யின் முழுப் பெயர் சந்தர் பிரகாஷ் குர்னானி, 1958 டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்த அவர் அவரது 40 பணி காலத்தில் ஹெச்சிஎல், HP, Perot சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றிக் கடந்த 19 வருடமாக டெக் மஹிந்திராவில் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் பல டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் இருந்தாலும் டெக் மஹிந்திரா கொஞ்சம் ஸ்பெஷல் தான். 1986ல் டெக்னாலஜி அவுட்சோர்சிங் நிறுவனமாகப் பிரிட்டிஷ் டெலிகாம் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்திற்கு மத்தியிலான கூட்டணி நிறுவனமாக உருவாகி 2012ல் பிரிட்டிஷ் டெலிகாம் வெளியேறி தனி நிறுவனமாக உருவெடுத்தது.
டெக் மஹிந்திராவின் வளர்ச்சியும், புகழும் 2009ல் பெரும் மோசடியில் சிக்கிய சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது மூலம் துவங்கியது. இந்தியாவில் இன்போசிஸ் உடன் நேருக்கு நேர் மோதும் அளவுக்குப் பெரும் வர்த்தகத்தைக் கொண்டு இருந்த சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தில் அதன் நிறுவனர்கள் செய்த மோசடி பெரும் சரிவுக்குக் கொண்டு வந்தது யாராலும் மறக்க முடியாது
மஹிந்திரா குழுமம் சத்யம் கம்பியூட்டர்ஸ்-ஐ கைப்பற்றிய நாளில் இருந்து சிபி குர்னானி தான் சிஇஓ-வாக உள்ளார். 2012 தான் மஹிந்திரா சத்யம் - டெக் மஹிந்திரா இணைக்கப்பட்டு 2.5 பில்லியன் டாலர் ஐடி நிறுவனமாக உருவெடுத்தது. இன்று 1.21 லட்சம் கோடி ரூபாய் நிறுவனமாக உருவெடுத்து தொடர்ந்து டாப் 5 ஐடி நிறுவனங்களின் பட்டியலுக்குள்ளேயே உள்ளது டெக் மஹிந்திரா.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications