இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான சிபி குர்னானி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி உடன் இந்நிறுவன பணி, நிர்வாகக் குழு என அனைத்துப் பதவி, பொறுப்புகளிலும் இருந்து விலகினார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கைப்பற்றி டெக் மஹிந்திரா உடன் இணைக்கப்பட்ட காலத்தில் இருந்து சிபி குர்னானி சிஇஓ-வாக இருந்தார். இதனாலேயே ஆனந்த் மஹிந்திராவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், இவர் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறினாலும் உங்களை முழுமையாக விட்டுவிட முடியாது என கூறி மஹிந்திரா ஹாலிடேஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக பணியாற்றுவார் என ஆனந்த் மஹிந்திரா அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில் அடுத்த 4 மாதத்தில் டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சி.பி.குர்னானி புதிய கூட்டணி, புதிய பதவி, புதிய பிஸ்னஸ், புதிய துறை என புதிய அவதாரம் எடுத்து அசத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப துறை ஜாம்பவான சி.பி.குர்னானி ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய வணிகத்தைத் துவங்குவதற்காக 'AIonOS' என்ற புது நிறுவனத்தைத் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இண்டர் குளோப் நிறுவனத்தின் குழு நிர்வாக இயக்குநரும், இணை நிறுவனருமான ராகுல் பாதியா மற்றும் சி.பி. குர்னானி இணைந்து அறிவித்தனர். மேலும் AIonOS நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக சி.பி. குர்னானி பணியாற்றப்போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இண்டர் குளோப் நிறுவனம் டிராவல், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விடுதித் துறைகளில் கவனம் செலுத்தும் மாபெரும் சாம்ராஜ்ஜியம் மட்டும் அல்லாமல் உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான நிறுவனமாக உள்ளது.
மலிவு விலை போக்குவரத்தில் புரட்சி செய்த இண்டர் குளோப் நிறுவனம் AIonOS நிறுவனத்தின் மூலம் விமான போக்குவரத்தில் புதிய மாற்றத்தையும், மேம்பட்ட சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இது AIonOS நிறுவனத்தின் நீண்ட கால செலவின கட்டுப்பாட்டு முயற்சியா..?
AIonOS நிறுவனம், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சேவைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் டெக் அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், எந்தொரு நிறுவனமும் டிஜிட்டல் சேவை தளத்திற்கு மாற உதவி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்படாத ராகுல் பாதியா தெரிவித்தார்.
AIonOS நிறுவனத்தை, இண்டர் குளோப் நிறுவனம் மற்றும் குர்னானியின் குடும்ப அலுவலகமான அசாகோ (Assago) ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டணி முயற்சியாகும். சிங்கப்பூரில் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்க உள்ளது. AIonOS நிறுவனத்தில் இண்டர் குளோப் நிறுவனமே பெரும்பான்மை பங்குதாரராக இருக்கும்.
இந்த புதிய கூட்டு முயற்சி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் குறிப்பான விமான போக்குவரத்துத் துறையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications