இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராக தமிழரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9, 2025) தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டியை வாக்கெடுப்பில் வென்றார்.
ராஜிய சபா உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களால் ஜூலை மாதம் பதவி விலகியதை அடுத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் என்பது, நாட்டில் இரண்டாவது உயர்ந்த அதிகாரம் கொண்டவர், மேலும் இப்பதவியில் இருப்பவர் தான் மாநிலங்களவையின் (ராஜ்ய சபா) அதிகாரப்பூர்வ தலைவராகவும் பணியாற்றுகிறார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் கிடைத்துள்ள வெற்றி முக்கியமான அதிகாரத்தை அவருக்கு கொடுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள்
சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் பி.சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 767 வாக்குகள் பதிவாகின, இதில் 752 வாக்குகள் செல்லுபடியாகவும், 15 வாக்குகள் செல்லாதவையாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தல் நாடாளுமன்ற இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கியது.
வாக்கு விவரங்கள்
முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், 2022ல் ஜகதீப் தன்கர் 528 வாக்குகளுடனும், 2017ல் வெங்கையா நாயுடு 516 வாக்குகளுடனும் வெற்றி பெற்றிருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேர்தல் செயல்முறை
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது மாநிலங்களவையின் 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் மக்களவையின் 543 உறுப்பினர்கள் ஆகியோரின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். சுமார் 788 உறுப்பினர்கள் கொண்ட இந்த தேர்தலில் இன்று 781 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்களாக கருதப்பட்டனப்.
என்டிஏ கூட்டணி வலிமை
தற்போது, என்டிஏ கூட்டணி கட்சிக்கு சுமார் 439 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாக உள்ளனர். மேலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் கூடுதல் வலிமையை சேர்த்தது. இதற்கு மாறாக, இந்தியா கூட்டணியை ஆதரித்தவர்கள் 324 உறுப்பினர்கள் மட்டுமே. பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியது, ராதாகிருஷ்ணனின் வெற்றி பாதையை மேலும் எளிதாக்கியது.
இந்தியா கூட்டணியில் இருந்து பிரிந்த ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவு அளித்தாலும், எண்ணிக்கையில் பின்னடைவு இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications