விண்ணை முட்டும் உணவுப் பொருட்களின் விலை! 6 சதவிதத்தை தாண்டிய பணவீக்கம்! சாமானியர்களின் பாக்கெட் காலி!

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 2026-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் சற்றே அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள், போக்குவரத்து, ஆடைகள், உணவகக் கட்டணம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு.. சாமானியர்களின் பட்ஜெட்டுக்கு பெரும் பிரச்சனையாய் மாறியுள்ளது. மத்திய புள்ளிகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் செப்டம்பர் 2026-ஆம் ஆண்டு 5.54 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் அக்டோபர் 2026-இல் 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல உணவுப் பணவீக்கமும் 7.74 சதவீதத்திலிருந்து 8.94 சதவீதமாக அதிகரித்துள்ளது.

விண்ணை முட்டும் உணவுப் பொருட்களின் விலை! 6 சதவிதத்தை தாண்டிய பணவீக்கம்! சாமானியர்களின் பாக்கெட் காலி!

நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் என்றால் என்ன?: குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையின் விலையை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதையே நுகர்வோர் விலைக் குறியீடு என்று கூறுகிறோம். இதில் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், ஆடைகள், வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடங்கும்.

உதாரணமாக 2025-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்க 100 ரூபாய் தேவைப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். அதே பொருட்களின் விலை அக்டோபர் 2026-ல் ரூ.106.09 ரூபாயாக உயர்ந்தால் ஓராண்டில் நுகர்வோர் விலைக் குறியீடு 6.09 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.

Also Read

அக்டோபர் மாதம் பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன?: அக்டோபர் மாதத்தில் வெங்காயம் மிக அதிகபட்சமான பணவீக்கத்தை பதிவு செய்துள்ளது. வெங்காய பணவீக்கம் 116.22 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல பூண்டு 60.74 சதவீதமும், வெள்ளி ஆபரணங்கள் 52.39 சதவீதமும், இஞ்சி 48.32%, எலுமிச்சை 47.30 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதைத் தவிர தனிநபர் பராமரிப்பு மற்றும் இதர சேவைகளின் பணவீக்கம் 10.14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உணவகங்கள் மற்றும் தங்குமிட சேவைகளின் பணவீக்கம் 10.06 சதவீதம், போக்குவரத்து பணவீக்கம் 5.84 சதவீதம், ஆடை மற்றும் காலணிகள் 4.96 சதவீதம், கல்வி சேவைகள் 4.02 சதவீதம், வீட்டு வசதி, குடிநீர், மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் பணவீக்கம் 2.90 சதவீதம், பொழுதுபோக்கு விளையாட்டு ஆகியவை 2.05 சதவீதம் உயர்ந்துள்ளன.

இதில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை 2.05 சதவீதம் என்ற குறைந்த பணவீக்கத்தை பதிவு செய்திருக்கிறது. இருந்தாலும் செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த பணவீக்க விகிதமும் சற்று அதிகம் தான். செப்டம்பரில் 1.40 சதவீதமாக இருந்தது. அதேபோல உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களின் பிரிவு.. அன்றாடத் தேவையில் அதிகபட்சமாக 36.75% பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவின் பணவீக்க விகிதம் 8.51% அதிகரித்ததால் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பான 6 சதவீதத்தையும் தாண்டி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+