சென்னை: இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியுள்ளது தான் தற்போது பெரும் விவாதமாக உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தான் சிபிஎம் கட்சியின் செல்வா கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டிஷ் முதலாளிகளுக்காக இந்திய தொழிலாளர்களை நாராயண மூர்த்தி காவு வாங்க வேண்டாம் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொழில் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ‛தி ரெக்கார்டு' எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய பொருளாதாரம் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் கூறிய கருத்து தான் பேசும் பொருளானது.
இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அலுவலர் மோகன் தாஸ் பை உடன் கலந்துரையாடியபோது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
"இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. அரசு துறைகளில் உள்ள ஊழல்களை குறைக்க நடவடிக்கை முயற்சிக்க வேண்டும். ஊழலை குறித்து படித்தவரையில் அதன் உண்மை நிலவரம் என்பது எனக்கு ரெியாது. ஆனால் அரசால் ஏற்படும் தாமதங்களை சரிசெய்யாமல் வல்லமை கொண்ட நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது.
மேலும் நாட்டுக்கான எனது கோரிக்கை என்னவென்றால் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
நாராயண மூர்த்தியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. இவரது இந்த கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பிறகே 8 மணிநேரம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போதும் பல நிறுவனங்கள் தினமும் 8 மணிநேரத்துக்கும் அதிகமான வேலை வாங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் தினமும் 12 மணிநேரம் இளைஞர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சிபிஎம் கட்சியை சேர்ந்த செல்வா கூறியுள்ளதாவது: "தொழிற்சாலை சட்டம் என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை உறுதி செய்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்களை வேலை செய்ய பணித்தால் அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் அளிக்கிறது. ஆனால் ஐடி துறையில் இது போன்ற சட்டங்கள் இல்லை. இல்லாத இடத்தில் சட்டங்கள் வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறோம்.
இத்தகைய சூழலில் தான் அவர் இப்படி பேசியுள்ளார். அவர் பேசியிருப்பது எப்படி இருக்கிறது என்றால் 'ஐடியில் இந்த நடைமுறை இருக்கும்போது தொழிற்சாலைகளில் ஏன் இந்த நடைமுறை இல்லை' என கேட்பதுபோல் உள்ளது. இந்திய முதலாளிகள் இந்தியாவில் இருக்கும் 8 மணி நேர வேலைத் திட்டத்தை மாற்ற வேண்டும் என நினைக்கின்றனர். இது இன்று நேற்று தொடங்கிய பேச்சு இல்லை. தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் கூட்டம்தான் இவர்கள்.

வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிறுவனங்கள் இந்திய அரசிடம் வைக்கும் முதல் கோரிக்கையே, இந்தியாவில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை நீர்த்து போக செய்ய வேண்டும் என்பதுதான். மத்தியில் மோடி வந்த பின் 44 சட்டங்களாக இருந்த தொழிலாளர் நல சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றிவிட்டார். இவர்களது கருத்தில் நாட்டின் வளர்ச்சியெல்லாம் இல்லை. முதலாளிகளின் வளர்ச்சிதான் அடங்கி இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி என்பது தொழிலாளர்களை சாவடிக்கும் வளர்ச்சியா? தொழிலாளி செத்து முதலாளி வாழ வேண்டுமா? நாராயண மூர்த்தியின் மருமகன் மற்றும் மகள் பிரிட்டனில் முறைகேடுகளில் சிக்கியவர்கள்தான். சரியாக வரி செலுத்தாமல் இருந்தவர்கள்தான். பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளிகளை காவு வாங்கும் செயலில் நாராயணமூர்த்தி ஈடுபட வேண்டாம்" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications