போலி ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு செக்.. அரசு அதிரடி நடவடிக்கை.. இனி தப்பே நடக்காது..!

சென்னை: தமிழகத்தின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச பொருட்களைப் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கார்டைப் பயன்படுத்தி சாமானிய மக்கள், தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது சிலர் சட்டவிரோதமாக ரேஷன் கார்டுகளைப் பெற்று ஏமாற்றி பொருள்களை வாங்கி வருகின்றனர்.

ரேஷன் கடைகள் மட்டும் இன்றி அரசு வழங்கும், அனைத்து நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கியமான ஆவணமாக உள்ளது. இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், மாத மாதம் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற முடியும். அதோடு மட்டும் இல்லாமல், அரசு வழங்கும் நிதி உதவி திட்டங்களிலும் பலன் பெற முடியும். அதே போல் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் இலவசமாக பொருட்களைப் பெறவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

 போலி ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு செக்.. அரசு அதிரடி நடவடிக்கை.. இனி தப்பே நடக்காது..!

ஆனால் சிலர் இதனை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ரேஷன் கார்டு பெற்று பொருட்களை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. அதாவது நிரந்தர வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் அரசு வேலையில் உள்ளவர்கள் மட்டுமே, இந்த ரேஷன் கார்டுகள் மூலம் அதிக பயனடைவதாகக் கூறப்படுகிறது.

இந்த சட்டவிரோத நடைமுறைக்கு பதில் அளித்த மத்திய அரசு, இதுபோல் தவறாக ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களை தகுதியற்றவர்கள் என பட்டியலிட உணவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் போலியாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் போன்ற சிலரின் விவரங்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

போலியாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் போன்றவரின் ரேஷன் கார்டுகள் முடக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற நபர்களின் விவரங்கள் வெளிவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

FY18 மற்றும் FY24 க்கு இடைப்பட்ட காலத்தில், கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் எரிபொருள் மானியத்திற்கான அரசாங்கத் திட்டங்களில் பயன்பெற போலியாக சிலர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், அதை கண்டறிந்து அகற்றியதன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் ₹3.35 லட்சம் கோடி சேமிக்கப்பட்டது என்று செலவினத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் செலவினத் துறை சுமார் 50.1 மில்லியன் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டுபிடித்து ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+