ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் (Craftsman Automation) நிறுவனம் 150 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ஆலையை நிறைவு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் வாகனங்கள் மற்றும் தொழில் சாலைகளுக்கு தேவையான பாகங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் இந்த துறையில் முன்னணி நிறுவனமாக இது செயல்படுகிறது. இந்த நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட நிறுவன வாரிய குழு இயக்குனர்கள் கூட்டத்தில் ஓசூரில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலையை நிறுவுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் ஓசூரில் ஆலையை நிறுவுவதாக கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தென்னிந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய தங்களுடைய ஆலைகளில் முழுமையாக உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் க தேவை அதிகரித்திருப்பதால் கூடுதலாக ஆலைகளை நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராப்ட்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனம் கூறியுள்ளது.
ஓசூரில் நிறுவப்படும் இந்த ஆலை மூலம் கிராப்ட்ஸ் மேன் ஆட்டோமேஷன் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அடுத்த 9 முதல் 12 மாதங்களுக்குள் 15 சதவீதம் வரை அதிகரிக்கும். தற்போது 90% கடன் வாங்கி இந்த ஆலையை நிறுவ இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனம் இந்தியாவில் கனரக வாகனங்கள் , கார் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவருக்கு தேவையான அனைத்து வகையான இயந்திரங்களையும், அலுமினிய பொருட்களையும் தயார் செய்து வழங்குகிறது.
1986 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்டது தான் கிராப்ட்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனம். தற்போது நாடு முழுவதும் 12 இடங்களில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. இந்த நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் 1576 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 39 சதவீதம் அதிகமாகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 4,075 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications