அமெரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் அங்கூர் ஜெயின்.. யார் இவர்..?

அமெரிக்கா: 30 வயதிற்குள்ளேயே பல்வேறு ஸ்டார்ட் அப்களை நிறுவி சிறந்த தொழில் முனைவோராகவும் சிறந்த முதலீட்டாளராகவும் அமெரிக்காவையே கலக்கி வருகிறார் இந்திய வம்சாவளியான அங்கூர் ஜெயின்.

1990 ஆம் ஆண்டு வாஷிங்டனில் பிறந்தவர். இவரது பெற்றோரான அணு மற்றும் நவீன் ஜெயின் ஆகிய இருவருமே தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவோர்களாக இருக்கின்றனர். இதனால் தான் என்னவோ அங்கூர் ஜெயின் தன்னுடைய 11ஆவது வயதிலேயே மை ஆன்லைன் குவிஸ் (myonlinequiz) என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்.

அமெரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் அங்கூர் ஜெயின்.. யார் இவர்..?

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை முடித்தார். 2008 ஆம் ஆண்டு இவர் கைரோஸ் சொசைட்டி (Kairos society) என்ற இளம் தொழில் முனைவோர்களுக்கான ஒரு அமைப்பினை உருவாக்கினார்.

இந்த கைரோஸ் அமைப்பு மூலம் இவர் பல்வேறு இளம் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களோடு இணைந்து சுகாதாரம், தூய்மையான தண்ணீர், போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பல்வேறு நிறுவனங்களை தொடங்குவதற்கு உதவியாக இருந்தார்.

2017 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி கைரோஸ் அமைப்பிலிருந்து உருவான நிறுவனங்களின் மொத்த மதிப்பு 3 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஸ்டார்ட்அப் அமெரிக்காவில் முக்கியமான ஒரு நிறுவனமாக கைரோஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

2012 ஆம் ஆண்டு அங்கூர் ஜெயின் ஹுமின்(humin) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினார். இது பின்னாளில் டின்டர் (tinder) நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இதனை அடுத்து டின்டர் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றி வந்தார்.

2017 ஆம் ஆண்டு டின்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய இவர் மாணவர்களுக்கான கடன் மற்றும் வீட்டு வசதி, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிறுவனத்தின் பெயர் ரைனோ(rhino) என ஆகும். இதனை அடுத்து இவர் பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட செரா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து வயதானவர்களுக்கான பராமரிப்பு தொடர்பான தொழிலிலும் ஈடுபட்டார்.

தற்போது இவர் பிள்ட் (Bilt) என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவில் வாடகை செலுத்துவதற்கு ரிவார்டுகள் வழங்கும் வகையில் இந்த பிள்ட் செயல்படுகிறது. பிள்ட் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட ரிவார்டுகளை வழங்க கூடிய வகையில் இந்த கான்செப்ட் இருப்பதால் அமெரிக்காவில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

குறிப்பாக இதில் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே பலரும் இந்த பில்ட் கிரெடிட் கார்டுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கூடிய விரைவில் விமான கட்டணங்கள், உணவகங்கள் மற்றும் ஜிம் , தங்கும் இடம் ஆகியவற்றிற்கான கட்டணங்களையும் பிள்ட் கிரெடிட் கார்டு மூலமே செலுத்த ஏதுவாக புதிய வசதிகளை கொண்டு வர இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.

பிள்ட் நிறுவனத்தில் இவருக்கு 36 சதவீத பங்குகள் இருக்கின்றன. இவரது மொத்த சொத்து மதிப்பானது 1.2 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. அங்கூர் ஜெயின் தன்னுடைய செயல்களுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

உலக பொருளாதார கூட்டமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு இவருக்கு யங் குளோபல் லீடர் (young global leader) என்ற பட்டத்தை வழங்கியது. அதேபோல ஃபோர்ப்ஸின் 30 அண்டர் 30 (forbes 30 under 30) பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். அண்மையில் இவர் முன்னாள் மல்யுத்த வீராங்கனை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+