சென்னை: ஒரு 10 வருடங்களுக்கு முன்பு நல்ல சம்பளத்துடன் வேலைக் கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது வேலைக் கிடைப்பதே கடினமானதாக உள்ளது. இவ்வாறு வேலை கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்தாலும். ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது சாத்தியமே. இந்தக் கட்டுரையில் ChatGPT-இன் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
ChatGPT மிகவும் பயனுள்ள உள்ள ஒரு AI (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பமாகும். இது அறிமுகமான நாளில் இருந்தே இதன் பயன்பாடு அதிகமாக இருந்தது வருகிறது. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அதிவேகத் தொழில்நுட்பமாக ChatGPT இருந்து வருகிறது. அதாவது தொழிற் சார்ந்த யோசனைகள், மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமான தகவல்கள், கோடிங் செய்வதற்கு தெரியாத தகவல்களை தெரிந்து கொள்வதற்கு என இதன் பயன்பாட்டை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதர்க்கு நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. அதில் ChatGPT-யும் ஒரு வழிதான். ChatGPT-ஐப் பயன்படுத்தி ஒருவர் வீட்டில் இருந்தே எப்படி பணம் சம்பாதிப்பது? என்பதைப் பார்ப்போம்.
1. வணிக யோசனை: வணிக யோசனைகளைப் பற்றி ChatGPT-யிடம் கேட்டால், அது ஒரு சில யோசனைகளைக் கூறும். மேலும் நீங்கள், உங்கள் ஆர்வம் மற்றும் திறமையைப் பற்றி அதனிடம் கூறினால், அது உங்களுக்கு சிறந்த யோசனையை வழங்கும். எனவே இது போன்ற யோசனைகள் உங்களுக்கு ஏதேனும் பொருந்துகிறதா.. என்பதை கவனியுங்கள். உங்களுடைய திறன்களுக்கு ஏற்ப ChatGPT சில வழிகளைக் கூறும். அவற்றைப் பயன்படுத்தி ஒரு பிசினஸை தொடங்கலாம்.
2. ஒரு இணையதளம்/ஆப்-ஐ (app) உருவாக்கவும்: ChatGPT நேரத்தை சேமித்து நமக்கு சரியான தகவல்களைத் தரும் ஒரு நல்ல தொழில்நுட்பமாக உள்ளது. மேலும் இது இணையதளங்களை உருவாக்க தேவைப்படும், கோடிங்கை (coding) செய்து தரக்கூடியது. இதனைப் பயன்படுத்தி HTML கோடிங், பைத்தான் (Python) கோடிங் மற்றும் வளர்ந்து வரும் புது ப்ரோக்ராம்களின் கோட்-ஐ (Code) எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வெப்சைட்டிற்கு தேவைப்படும் Java script போன்றவற்றையும் AI தொழில்நுட்பத்தைக் கொண்டு பயன்படுத்த முடியும். இதனால் உங்க வெப்சைட்டுக்கு அதிக டிராபிக் வந்து உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
3. Chat Bot-களை உருவாக்கவும்: ChatGPT-ஐப் பயன்படுத்தி,வணிகத்திற்கான Chat Bot-களை உருவாக்கலாம், விளம்பரம் செய்வதற்கு தேவைப்படும் தகவல்களைப் பெறலாம், ChatGPT-யால் இயக்கப்படும் பிற தொழில்நுட்பங்களை வைத்து பணம் சம்பாதிக்கலாம்.
4. கன்டென்ட் ரைட்டிங்: ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் உங்களுக்கு பிடித்தமான தகவல்களை எழுதி போடலாம். இதன் மூலம் உங்களுக்கு டிராபிக் வந்தால் அதிலிருந்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதற்கு ChatGPT-ஐ பயன்படுத்தலாம்.
வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க ChatGPT யை பயன்படுத்த முயற்சிக்கும்போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில காரணிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
ChatGPT புதுப்பித்த நிலையில் இல்லை, அதாவது 2023-க்கு முன் உள்ள தகவல்களை மட்டுமே ChatGPT காண்பிக்கும். எனவே அவை எப்பொழுதும் சரியான பதிலையே தரும் என்பது சந்தேகம் தான். அவை கூறும் தகவல்கள் உண்மையா என துல்லியமாக உறுதிப்படுத்த முடியாது. எனவே அந்த தகவல்களை இரு முறை சரி பார்ப்பது நல்லது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மனித நுண்ணறிவு மற்றும் தொடுதல் இல்லாதது. சில சமயம் நமது தேவைகளை பூர்த்தி செய்யாமல் தவறான தகவல்களை தரலாம். மேலும் உங்கள் அல்லது மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் போகலாம்.
என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை எட்டி இருந்தாலும், அவை முழுவதுமாக உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஐடியாக்களை தரும் என்று சொல்ல முடியாது. மேலும் அது கூறும் சில யோசனைகள் உங்களுக்கு பொருந்தாமலும் போகலாம். எனவே நிதி இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வணிக ஆலோசனையை ChatGPT-இடம் பெற்றாலும், உங்கள் வீட்டில் உள்ள நபர்களிடமோ அல்லது உங்களுடைய நிதி ஆலோசகரிடமோ சென்று ஆலோசனை பெற்று உங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தொழிலைத் தொடங்குங்கள்.


Click it and Unblock the Notifications