பெங்களூரு: ரிவார்டுகள், கேஷ் பேக்குகள், டிஸ்கவுண்டுகள் என பல சலுகைகளை வழங்கி தான் நிதிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. அப்படி நிதிச்சேவை வழங்கும் ஒரு நிறுவனத்தை தான் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
குனால் ஷா என்பவரால் 2018 ஆம் ஆண்டு கிரேட் (CRED) என்ற பேமெண்ட் கேட்வே நிறுவனம் தொடங்கப்பட்டது. நாம் கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் வீட்டு வாடகை ஆகியவற்றை CRED தளம் மூலம் செலுத்தினால் ரிவார்டுகள், கேஷ் பேக்குகள், பல்வேறு சேவைகளுக்கான டிஸ்கவுண்டுகள் ஆகியவை கிடைக்கும் என்கிறது இந்நிறுவனம்.

மேலும் வாடிக்கையாளர்கள் குறுகிய கால கடன்களையும் பெற்றுக் கொள்ளலாம். கிரெட் வழியாக நாம் கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்தும் போது பல்வேறு ரிவார்டுகள் கிடைக்கின்றன என்பதால் பலரும் இதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே டெல்லியை சேர்ந்த கிரெட் பயன்பாட்டாளர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள குமுறல் தான் தற்போது ட்ரெண்டாகி வந்துள்ளது. குர்ஜோத் அஹ்லுவாலியா என்பவர் பங்குச்சந்தை, பெர்சனல் பைனான்ஸ் மற்றும் சேமிப்பு வழிமுறைகள் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிடுபவர்.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய குர்ஜோத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கிரெட் நிறுவனம் குறித்தி வெளியிட்டுள்ள ஒரு பதிவு ட்ரெண்டாகி உள்ளது. கிரெட் மூலம் 87,000 ரூபாய் கிரெடிட் கார்டு கட்டணத்தை இவர் செலுத்தி இருக்கிறார்.
அதற்கு கிரெட் அளித்த கேஷ் பேக் வெறும் ஒரு ரூபாய். இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர், தயவு செய்து யாரும் கிரெட்டை பயன்படுத்தாதீர்கள், உங்களது வங்கி செயலி அல்லது இணையதளம் மூலம் நேரடியாகவே கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்தி விடுங்கள் எனக் கூறியுள்ளார். கிரெட்டிடம் உங்களின் எந்த ஒரு தகவலையும் பகிராதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
குர்ஜோத்தின் இந்த பதிவு 6.5 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் கமண்ட் பகுதியில் தங்களது அனுபவங்களை பதிவிட்டுள்ளனர். ஒரு பயனாளர் நமது தரவுகளை எடுத்துக் கொள்கிறார்கள் அதன் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள் இதனால் நமக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது எனக் கூறியுள்ளார்.
மற்றொரு பயனாளர் இதை நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் உங்களுடைய தரவுகளை எடுத்து ஃபின்டெக் நிறுவனங்களுக்கு அவர்கள் விற்பனை செய்து லாபமீட்டுகின்றனர் என கூறியுள்ளார்.
மற்றொரு பயனாளர் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்னரே நான் இதை செய்து விட்டேன் ஆரம்பத்தில் பல்வேறு சலுகைகளை தருவது போல ஒரு பாவனையை உண்டாக்கி தற்போது பயனாளர்களின் தரவினை பெறுவதை மட்டுமே அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என கூறியுள்ளார் .
Story written by: Devika


Click it and Unblock the Notifications