ஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக்கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தனியார் வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் கடன் விவரங்களை அளிக்க தாமதப்படுத்துவதாக கடன் பணியகம் ஒன்று ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளித்துள்ளது.

உள்ளூர் நிறுவனமான Experian Plc தான், ரிசர்வ் வங்கியிடம், HDFC bank தனது மில்லியன் கணக்கான சில்லறை கடன் வாங்கியவர்களின் விவரங்களை வழங்குவதில் தாமதமாகிவிட்டது என்று கூறியுள்ளது.

அதில் கடன் வாங்குபவர்கள் திரும்ப செலுத்தும் நிலை உள்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை இரண்டு ஆண்டுகளாகவே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடன் பற்றிய தரவு

கடன் பற்றிய தரவு

கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிட, இந்திய வங்கிகள் எக்ஸ்பீரியன் போன்ற பணியகங்களின் தரவினை பொறுத்துள்ளது. குறிப்பாக தற்போது உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மோசமான கடன்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த சூழ்நிலையில் இந்த மதிப்பீடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

இது வங்கிகளின் கடமை

இது வங்கிகளின் கடமை

எக்ஸ்பீரியன் மற்றும் மூன்று கடன் பணியகங்களுக்கு மாதாந்திர அடிப்படையில், வங்கிகள் கடன் வாங்கியவர்களின் தரவினை கொடுக்க கடமைப்பட்டுள்ளன. ஆனால் ஹெச்டிஎஃப்சி வங்கி அந்த தகவல்களைத் தான் அளிக்க தாமத்திப்பதாக கூறப்படும் நிலையில் தான் இந்த விவகாரம் ஆர்பிஐ வரை தற்போது சென்றுள்ளது.

அப்படி எல்லாம் இல்லை

அப்படி எல்லாம் இல்லை

ஆனால் ஹெச்டிஎஃப்சி வங்கி தரப்பிலோ அப்படி ஏதும் தகவல்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படவில்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாங்கள் எப்போதும் போல தகவல்களை பணியகங்களுக்கு அளித்து வருகிறோம். அதோடு, நாங்கள் இந்த விஷயத்தில் பணியகங்களோடு இணக்கமாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

கிரெடிட் ஸ்கோரை வழங்கும் முக்கிய பணி

கிரெடிட் ஸ்கோரை வழங்கும் முக்கிய பணி

இந்தியாவின் வங்கிகள் தங்கள் வங்கிகள் கடன்களை திருப்பிச் செலுத்தும் நிலை, குறித்த விவரங்களை ரகசிய அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய கட்டமாக இந்த கடன் பணியகங்கள் இருந்து வருகின்றன. உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் அல்லது தனி நபர் கடனில் நிலுவை இருந்தால், பணியகங்களில் இருந்து வரும் மற்றும் கடன் வழங்குனரின் வெளிப்பாட்டை அதிகரிப்பதை தடுக்கலாம்.

மோசமான கடன் விகிதம் அதிகரிக்கும்

மோசமான கடன் விகிதம் அதிகரிக்கும்

ஹெச் டிஎஃப்சி வங்கி தற்போது தனது கடன் புத்தகத்தில் 10 டிரில்லிய ரூபாய்க்கு மற்றும் 56 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக மோசமான கடன் விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகிதமானது வரும் மார்ச் மாதத்திற்குள் 12.5% உயரலாம் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

சிபில் வழங்கும் நிறுவனங்கள்

சிபில் வழங்கும் நிறுவனங்கள்

இந்தியாவில் எக்ஸ்பீரியன், டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (TransUnion CIBIL Ltd), ஈக்விஃபாக்ஸ் இன்க் (Equifax Inc), சிஆர்ஐஎஃப் ஹை மார்க் சிபில் லிமிடெட் (CRIF High Mark Credit Information Services) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் உங்கள் கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit bureaus has informed the RBI about delayed sharing its loan details from HDFC bank

HDFC bank loan details.. Credit bureaus has informed the RBI about delayed sharing its loan details from HDFC bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X