ஜூலை 1 முதல் கிரெடிட் கார்டுகளில் வரப் போகும் மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு.. வங்கிகளுக்கு சிக்கல்!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) ஜூலை 1-ஆம் தேதி முதல், அனைத்து கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்களையும் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS) மூலமாக செலுத்த வேண்டும் என்ற புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues போன்ற முக்கிய ஃபின்டெக் தளங்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய RBI ஆணை: ஜூலை 1-ஆம் தேதி முதல், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் BBPS மூலம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. RBI வழங்கிய இந்த புதிய உத்தரவின் மூலம் பணம் செலுத்தும் நெட்ஒர்க்கின் செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜூலை 1 முதல் கிரெடிட் கார்டுகளில் வரப் போகும் மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு.. வங்கிகளுக்கு சிக்கல்!

கிரெடிட் கார்டு வழங்கும் உரிமை பெற்ற 34 வங்கிகளில், வெறும் 8 வங்கிகள் மட்டுமே தற்போது BBPS-இல் பில் செலுத்தும் செயல்முறையை அமல்படுத்தியுள்ளன.

RBI விதிகளின் கீழ் இணங்கியுள்ள வங்கிகள்:

1. எஸ்பிஐ கார்டு (SBI Card)
2. பேங்க் ஆஃப் பரோடா கார்டு (Bank of Baroda Card)
3. கோடக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)
4. இண்டஸ்இண்ட் பேங்க் (IndusInd Bank)
5. ஃபெடரல் பேங்க் (Federal Bank)

ஆனால், நாட்டின் சில முன்னணி வங்கிகளான ஹெச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank), ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank), மற்றும் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) போன்ற பேங்குகள், இன்னும் BBPS கட்டண முறையை செயல்படுத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வங்கிகள் இணைந்து 5 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கணட சில வங்கிகள் RBI உத்தரவிற்கு இணங்கவில்லை என்றால், PhonePe மற்றும் Cred போன்ற பின்டெக் நிறுவனங்கள், ஏற்கனவே BBPS உறுப்பினர்களாக இருந்தாலும், ஜூன் 30-க்குப் பிறகு, இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளைச் செயல்படுத்த முடியாது.

மேலும் இந்த புதிய மாற்றங்களை செய்வதற்கு ஃபின்டெக் துறைகளுக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. வங்கிகள் மற்றும் ஃபின்டெக் துறைகளுக்கு BBPS அமைப்புடன் தங்களுடைய பேமெண்ட் சிஸ்டத்தை மாற்றி அமைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான தாக்கங்கள்: வாடிக்கையாளரைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் ஜூலை 1 முதல், அவர்களின் கார்டு வழங்குபவர் BBPS ஒருங்கிணைப்புக்கு இணங்கவில்லை என்றால், கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதில் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். மேலும் ஏற்கனவே BBPS சிஸ்டத்தை பயன்படுத்தும் வங்கிகளின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தடையற்ற பேமெண்ட் அனுபவத்தை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+