பெரும்பாலான கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் கேஷ் பேக் சலுகைகளுக்காகவே கிரெடிட் கார்டுகளைப் பெறுகின்றனர். சிலர் அதிகம் செலவு செய்து இந்த ரிவார்டுகளை அதிகரிக்க வழி தேடுகின்றனர். அப்படி கிரெடிட் கார்டு ரிவார்டுகளை அதிகரிப்பதற்காக இருக்கும் மெத்தேட் தான் "சர்னிங்" (credit card churning). இந்த பதிவில் சர்னிங் என்றால் என்ன? இதைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு ரிவார்டுகளை அதிகரிப்பது எப்படி? இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்ப்போம்.
கிரெடிட் கார்டு சர்னிங் என்றால் என்ன?: கிரெடிட் கார்ட் சர்னிங் என்பது கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்காகவே பல்வேறு கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன் பிறகு மூடும் முறையாகும். இதன் மூலம் கிரெடிட் கார்டு பயனர்கள் பல்வேறு சலுகைகளைப் பெறலாம். இதில் புதிதாக கிரெடிட் கார்டுகளை பெறுவதற்கு ஜாயினிங் பரிசுகள், ரிவார்டுகள் போன்ற பலன்கள் கிடைக்கும். இவற்றை பயணம், ஷாப்பிங், உணவு போன்றவற்றிற்கு பயன்படுத்தி பலன் பெறலாம். ஆனால் கவனமாக இல்லாவிட்டால் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது.

இதை எப்படி செய்வது?:
ஆராய்ச்சி: கிரெடிட் கார்டு சர்னிங்கை நீங்கள் தேர்வு செய்யத் திட்டமிடும் முன் பல்வேறு கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்து நன்கு ஆராய வேண்டும். அதிக அளவு போனஸ் மற்றும் பிற நன்மைகள் கிடைக்கும் கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும். கூடுதலாக கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உங்கள் சொந்த நிதி நிலையை கவனமாக பரிசீலியுங்கள்.
சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்யுங்கள்: சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்து தேர்வு செய்து அதன் பிறகு கிரெடிட் கார்டுகள் பெற விண்ணப்பிக்கவும்.
கிரெடிட் கார்டு வரம்பு: பல கிரெடிட் கார்டுகளுக்கு வரம்பு இருக்கும். அதைத் தாண்டி நீங்கள் எந்த ரிவார்டுகளையும் பெற முடியாது. எனவே உங்கள் கிரெடிட் கார்டின் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள நிபந்தனைகளை தவறாமல் சரி பார்க்கவும். உங்களுடைய செலவுகளை செய்த பிறகு அதற்கு கிடைக்கும் ரிவார்டுககளை உங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம்.
கிரெடிட் கார்டு மதிப்பீடு: பல்வேறு கட்டணங்கள் குறித்து கருத்தில் கொண்டு உங்களுடைய எல்லா கிரெடிட் கார்டுகளையும் மீண்டும் மதிப்பீடு செய்து பயனளிக்காத கிரெடிட் கார்டுகளை மூடிவிடலாம். ஆனால் நீங்கள் கிரெடிட் கார்டை மூடும்போது உங்களுக்கு நிலுவையில் எந்த கடனும் இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகபட்ச பலன்களை பெற இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
நன்மைகள்: இந்த செயல்முறையை செய்யும்போது பயணம், விமான நிலைய ஓய்வறை, ஹோட்டல், ஆன்லைன் ஷாப்பிங், திரைப்பட டிக்கெட் போன்றவற்றுக்கு நிறைய சேமிக்க முடியும். உங்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்யும் போது அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகரிக்கும். வழக்கத்துக்கு மாறாக கிரெடிட் கார்டு முறையை பயன்படுத்தும் போது போனஸ் அதிகரிக்கும். இதன் மூலம் நீங்கள் ஒரு பெரிய தொகையை பெறலாம்.
தீமைகள்: ஒவ்வொரு கிரெடிட் கார்டுகளுக்கும் வருடாந்திர கட்டணங்கள் இருக்கும். வருடாந்திர கட்டணம் மட்டும் இன்றி பிற கட்டணங்களையும் சேர்த்துதான் கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் வசூலிக்கின்றனர். எனவே நீங்கள் ஒரு கிரெடிட் கார்ட் பெற விண்ணப்பிக்கும் போதே அதோடு தொடர்புடைய கட்டணங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் பல கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்து அதை மூடுவதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். இதனால் புதிய கிரடிட் கார்டு விண்ணப்பிப்பதற்கு பிரச்சனை ஏற்படலாம். பல வங்கிகள் கிரெடிட் கார்டு சர்னிங் முறையை ஊக்குவிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் கிரெடிட் கார்டு கணக்குகளை திறப்பதும் மூடுவதும் எல்லா வங்கிகளிலும் பெற முடியாது. இதையும் கருத்தில் கொண்டு விண்ணப்பியுங்கள். கிரெடிட் கார்டுகளின் அதிகபட்ச பலன்களை பெற அதிகமாக செலவு செய்ய வேண்டும். இது உங்கள் நிதி நிலையை பாதிக்கலாம். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவு செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications