இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் தற்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரெடிட் கார்டுகள் ஒரு காலத்தில் நிதி சுதந்திரம் மற்றும் வசதிக்கான அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பல இளம் இந்தியர்களை கடன் வலைக்குள் தள்ளுகிறது என்று தான் சொல்ல வேண்டும். கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு குறிப்பாக மில்லியனல்கள் மற்றும் ஜெனரல் இஸட் தலைமுறையினரின் மத்தியில் அதிகமாகி விட்டதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது பல கிரெடிட் கார்டுகள் "பை நவ் பே லேட்டர்" திட்டங்கள் மூலம் EMI அடிப்படையிலான பர்ச்சேஸ்களை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக கிரெடிட் கார்டு கடன்கள் இன்னும் அதிகரித்து விட்டன. மார்ச் 2024-ஆம் ஆண்டில் 2.6 லட்சம் கோடியாக இருந்த கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள் ஜூன் மாதம் 2024-ஆம் ஆண்டில் 2.7 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இது மார்ச் 2019 ஆம் ஆண்டில் 87,686 கோடியிலிருந்து 5 ஆண்டுகளில் 24 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் அதிகரித்திருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது.

2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில், கிரெடிட் கார்டு தவணைகள் 2023-ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த 1.7 சதவீதத்தில் இருந்ததிலிருந்து 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று டிரான்ஸ்யூனியன் சிபில் தரவுகள் தெரிவிக்கின்றன. 0.1% உயர்வு புறக்கணிக்கக்கூடியதாகத் தோன்றினாலும், அதிகரித்து வரும் நிலுவையில் உள்ள கட்டணங்களை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் ஜென் Z தலைமுறையினர் EMI அடிப்படையிலான பர்சேஸ்கள் மற்றும் BNPL திட்டங்களின் வசதியினால் கடன் பெரும்பாலான இளம் மில்லினியல்கள் முழு கிரெடிட் வரம்பையும் பயன்படுத்தி கடனை அடைக்க சிரமப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பொதுவாகவே கிரெடிட் கார்டு கடன்களுக்கு ஆண்டுக்கு 36 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இது தெரியாமல் கடன் பெறுபவர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டுமே செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கே தெரியாமல் வட்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் கடனை திருப்பி செலுத்துவது சற்று கடினமாகிறது.
கிரெடிட் கார்டு பயன்பாடு அக்டோபர் 2023-இல் 1.72 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. 2022-23 நிதியாண்டில் ரூ 4,072 கோடியாக இருந்தது.
கிரெடிட் கார்ட் பில்களை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால், பாதுகாப்பற்ற கடன்களின் மூலம் வாரும் ஆபத்து குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கவலை தெரிவித்துள்ளது. என்னதான் கிரெடிட் கார்டுகள் உடனடி நிதி தேவைக்கு விரைவான தீர்வை வழங்கினாலும், அவை மாதத்திற்கே தோராயமாக 3.6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கலாம். மேலும் நீங்கள் பில் செலுத்த தவறவிடும்போது இந்த தொகை மேலும் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் சுமை அதிகரிக்கலாம். எனவே கிரெடிட் கார்டுகளை பாதுகாப்போடு குறிப்பிட்ட கிரெடிட் வரம்புக்குள் பயன்படுத்துவது லாபகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications