கிரெடிட் கார்ட் உரிமையாளர் இறந்து போனால்.. அவருடைய குடும்பம் கடனை செலுத்த வேண்டுமா?

முன்பெல்லாம் ஒரு சிலருடைய கைகளில் மட்டும் தான் கிரெடிட் கார்டை பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நல்ல பரிவர்த்தனை கொண்டவர்களின் கணக்குகளை குறிவைத்து வங்கிகள் வாரி வாரி கிரெடிட் கார்டு வழங்குகின்றன. எல்லாக் கடன்களுக்கும் 5 முதல் 16 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் கிரெடிட் கார்ட் கடன்களுக்கு வருடத்திற்கு 42% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் இதற்கு வட்டி இல்லா காலம் இருப்பதால் நம்பி செலவு செய்து கொண்டு பின்னர் வட்டியே இல்லாமல் செலுத்துபவர்களும் இருக்கின்றனர்.

அப்படி கிரெடிட் கார்டு பெற்று செலவு செய்தவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் அவருடைய கடனை யார் செலுத்துவது? வங்கிகள் குடும்பத்தினரிடம் திருப்பிச் செலுத்த கேட்குமா? அல்லது கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எல்லா விவரங்களையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

கிரெடிட் கார்ட் உரிமையாளர் இறந்து போனால்.. அவருடைய குடும்பம் கடனை செலுத்த வேண்டுமா?

கிரெடிட் கார்ட் பெற்றவர் திடீரென இறந்தால் என்ன நடக்கும்?: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தாலும் அந்த கடன் அப்படியே தான் இருக்கும். ஆனால் அவருடைய குடும்பம் அதை அடைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அதேபோல இந்த கடன் பிணையமில்லாத கடன் ஆகும்.

Also Read

உதாரணமாக தங்கக் கடனுக்கு நாம் தங்கத்தை கொடுக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு சொத்து பத்திரத்தை வழங்க வேண்டும். ஆனால் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றுக்கு எதையும் பிணயமாக வழங்கத் தேவையில்லை. மேலும் இறந்தவருடைய வாரிசுதாரர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்துக்களை வைத்து கடனை அடைக்கத் தேவையில்லை.

சட்டப்பூர்வ வாரிசுதாரர்களின் பொறுப்பு என்ன?: 2023-ஆம் ஆண்டில் இதே போன்ற வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது இறந்தவருடைய கிரெடிட் கார்டை அவருடைய சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இறந்தவரிடம் பேங்க் பேலன்ஸ், முதலீடுகள் அல்லது இதர சொத்துக்கள் இருந்தால் அதிலிருந்து கடனை வசூலிக்க முடியும். இல்லாத பட்சத்தில் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஒரு வேளை கிரெடிட் கார்டு பெறும் போது இறந்தவரோடு சேர்ந்து யாராவது கூட்டாக விண்ணப்பித்திருந்தால் இறந்தவருக்கு பதிலாக மற்றொருவர் கடனை செலுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் கண்டிப்பாக அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும்.

வங்கி கணக்கில் போதுமான பேலன்ஸ் இல்லாத போது என்ன நடக்கும்?: கிரெடிட் கார்டு பெற்றவர் இறந்த பிறகு வங்கிகள் அவருடைய பேலன்ஸ் முதலீடு போன்றவற்றை ஆராயும். உதாரணமாக அவர் பெற்ற கடனின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் ரூ.1 லட்சம் இருந்தால் அந்த பணத்தை வங்கிகள் எடுத்துக் கொள்ளும். மீதமுள்ள தொகை இழப்பாக கருதப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். குடும்பத்தினர் செலுத்தத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+