கிரெடிட் கார்டு நிலுவை தொகை வரலாற்று உச்சம்.. ஆர்பிஐ அதிர்ச்சி ரிப்போர்ட்..!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி இந்திய மக்களின் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை ஜனவரி மாதம் வரலாறு காணாத விதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

அதாவது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை உபயோகித்துவிட்டு, திருப்பி செலுத்த வேண்டிய (outstanding amount) தொகையாகும். அந்தத் தொகையை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாமல் இருந்தால் அது நிலுவைத் தொகையுடன், கூடுதல் அபராதத்துடன் அப்பணத்தை திருப்பி செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டு தனிநபர் நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது, ஆனால் அதேவேளையில் இதை சரியான முறையில் பயன்படுத்தினால் கட்டாயம் பலன் அளிக்கும்.

கொரானா

கொரானா

இந்த கொரானா வந்தாலும் வந்தது, மக்களுக்கு பிடித்தது கஷ்ட காலம். தொடர் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பால் விலை உயர்வு, கடன் வட்டி விகித உயர்வு, பணவீக்கம் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

 மக்கள் புலம்பல்

மக்கள் புலம்பல்

முன்பெல்லாம் சாதாரணமாக வீட்டில் ஒரு நபர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்தாலே போதுமானதாக இருந்த காலம் சென்று, இன்று எல்லோரும் வேலைக்குச் சென்றாலும் வாழ்க்கையை ஓட்டுவது சிரமமாக உள்ளதாக மக்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.

 கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

ஆனாலும் மக்களுக்கு கிரெடிட் கார்டுகள் மேல் உள்ள ஆர்வம் மட்டும் குறையவில்லை என்பது தான் உண்மை. அதனால் இந்தியாவில் ஜனவரி மாதம் கிரெடிட் கார்டுகளின் நிலுவை தொகை 29.6 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன.

 ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்!

ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்!

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் 10 மாதங்களில் கிரெடிட் கார்டு பயன்பாடுகள் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், ஜூன் மாதம் அதிகபட்சமாக 30.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

 SBI வங்கி அதிகாரி கருத்து!

SBI வங்கி அதிகாரி கருத்து!

டிஜிட்டல் மயமாக்குதலின் மூலம் இன்று பணப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இந்தியர்கள் பள்ளிக் கட்டணங்கள், ஜிம், மின்சார பில்ம் உணவகங்கள், வீட்டை பராமரிப்பது தொடங்கி அனைத்திற்கும் கிரெடிட் கார்டுகளையே பயன்படுத்துகின்றனர். மக்கள் சமீப காலமாகவே தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிகம் செலவு செய்வதாக SBI கார்டின் MD & CEO ராம மோகன் ராவ் அமரா கூறியுள்ளார்.

  1.28 லட்சம் கோடி ரூபாய்

1.28 லட்சம் கோடி ரூபாய்

மேலும் 2022 டிசம்பரில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட செலவுகள் ரூ.1.26 லட்சம் கோடியிலிருந்து, இந்த ஆண்டு ஜனவரியில் 1.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் ராம மோகன் ராவ் கூறியுள்ளார்.

 பென்ச்மார்க் அளவு

பென்ச்மார்க் அளவு

அதுமட்டுமின்றி கிரெடிட் கார்டின் வளர்ச்சியானது ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், கடந்த 11 மாதங்களில் இருந்து கிரெடிட் கார்டு செலவுகள் தொடர்ந்து 1-லட்சம் கோடிக்கு மேல் சென்றுள்ளதாகவும் ராவ் அவர்கள் கூறினார்.

 கிரெடிட் கார்டு விற்பனை விகிதம்!

கிரெடிட் கார்டு விற்பனை விகிதம்!

ஜனவரி 2023 இல் மட்டும், வெவ்வேறு வங்கிகளால் கிட்டத்தட்ட 8.25 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் நாட்டின் முதல் 5 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளாகும்.

 நிலுவை தொகை வளர்ச்சி

நிலுவை தொகை வளர்ச்சி

இந்தியாவில் ஜனவரி 2023 இல் கிரெடிட் கார்டுகளின் நிலுவை தொகை வருடாந்திர வளர்ச்சி 29.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், அதன்பின் நிலுவைத் தொகையானது ஜனவரி 2022 இல் ரூ.1,41,254 கோடியிலிருந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 1,86,783 ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+