இந்தியாவில் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், பயன்படுத்தும் அளவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் முறையாக கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை (outstanding) 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் கூறுகிறது.
சமீபத்தில் ரூபே கிரெடிட் கார்டுகளை யூபிஐ செயலியில் இணைத்து அதன் மூலம் பேமெண்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ள காரணத்தால் கிரெடிட் கார்டு பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை சுமார் 2,00,258 கோடியாக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 29.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், ஸ்வைப் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் உட்பட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு, ஏப்ரல் 2023 இல் 1.3 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையில் ஏற்பட்டு உள்ள உயர்வு பெருகிவரும் கடன் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்க முடியாது. மக்களின் கிரெடிட் கார்டு பயன்பாட்டின் விரிவாக்கம் மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தையும் குறிக்கிறது. கடந்த ஒரு ஆண்டில், நுகர்வோரின் செலவினங்கள் அதிகரித்துள்ளது.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு என்பது எப்போதும் நுகர்வோர் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விஷயம், இருப்பினும், நிலுவையில் உள்ள நிலுவைகளின் அதிகரிப்பு பணவீக்கத்திற்கும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம் விலைவாசி உயர்வால் மக்கள் பண தேவையை கிரெடிட் கார்டு மூலம் பூர்த்தி செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications