இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் கார்டு நெட்வொர்க் விருப்ப தேர்வு குறித்த அறிக்கை மாற்றங்களை முக்கியமானதாக அறிவித்துள்ளது
ஆர்பிஐ வெளியிட்டு உள்ள அறிக்கையில், வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கும் அல்லது வர்த்தக தொடர்புக்கும் ஏற்றவாறு நெட்வொர்க்-ல் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கு பதிலாக அவர்கள் வாடிக்கையாளர் விரும்பிய கார்டு நெட்வொர்க் பெறுவார்கள்.

இதில் நெட்வொர்க் என குறிப்பிடப்படுவது Visa, MasterCard, RuPay தான். அதாவது வங்கிகள் இனி தங்களுக்கு விருப்பமான நெட்வொர்க்-ல் கார்டுகளை வழங்காமல் வாடிக்கையாளர் விருப்பத்துற்கு ஏற்ப கார்டுகளை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை வரைவு அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
Visa, MasterCard, RuPay போன்ற அட்டை வழங்குநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அட்டை நெட்வொர்க்குகளில் அட்டைகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டை வழங்கும் போது பல அட்டை நெட்வொர்க்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விருப்பத்தை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதன் வரைவு அறிக்கையில் கூறியுள்ளது.
தற்போது ஆர்பிஐ கொடுத்துள்ள விதிகள் கிரெடிட் கார்ட, டெபிட் கார்ட் அல்லது ப்ரீபெய்ட் கார்ட் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது 5 கிரெடிட் கார்டு நெட்வொர்க்-ஐ வைத்துள்ளது. இதில் விசா, மாஸ்டர் கார்டு, ருபே, அமெரிக்க எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் ஆகியவை அடங்கும். இப்புதிய விதி மாற்றம் வாயிலாக ஆக்டோபர் 1 முதல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நெட்வொர்க்-ல் மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக வங்கி மற்றும் கார்ட் நெட்வொர்க் மத்தியில் card network portability option வர உள்ளது.


Click it and Unblock the Notifications