கிரெடிட் கார்டு கடன் அளவுகள் உச்சம்.. இது நல்லதுக்கு இல்ல பாஸ்..!!

இந்தியர்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் அளவு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அதவாது இந்திய மக்களின் கிரெடிட் கார்டு கடன் அளவு சாதனை அளவை எட்டியுள்ளது. இது மக்களின் நிதி ஸ்திரதன்மையை பெரிய அளவில் பாதிக்கும் என்பது தான் முக்கிய பிரச்சனை, ஏற்கனவே நாட்டு மக்களின் சேமிப்பு அளவு 30 - 40 வருடத்தில் மோசமான அளவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடன் அளவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முதல் துவங்கிய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏற்கனவே அதீத கடனில் உள்ள குடும்பங்கள் இக்காலக்கட்டத்தில் கூடுதல் கடனை வாங்கினால் இதை திருப்பி செலுத்த முடியாத மக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் வங்கிகளுக்கு எழுந்துள்ளது. அதாவது கடனை திருப்பி செலுத்தா நிறுவனங்களை போல் தனிநபர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

கிரெடிட் கார்டு கடன் அளவுகள் உச்சம்.. இது நல்லதுக்கு இல்ல பாஸ்..!!

அளவுக்கதிகமாக செலவு செய்தல் : ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, கிரெடிட் கார்டுகள் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 1.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதம் 1.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விரு மாதங்களிலும் முந்தைய சாதனை அளவான 1.40 லட்சம் கோடி ரூபாயை அளவீட்டை இந்திய மக்கள் முறியடித்துள்ளனர்.

முக்கிய பிரச்சனை: இந்தியர்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் சேமிப்பு அளவில் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப செலவினம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த நிலையை சமாளிக்க வருமானம் தேக்கத்தையும், மன அழுத்தத்தையும் சரி செய்ய மக்கள் அதிகப்படியான கடனை வாங்க துவங்கியுள்ளனர்.

அது எதைக் குறிக்கிறது? : 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் குறைந்த பண புழக்கம் கொண்ட சூழ்நிலையில் சில்லறை விற்பனை அதிகரித்து வரும் விற்பனைகள் மத்தியில், மக்கள் இந்த சூழ்நிலையை கடன்கள் மூலம் செலவு செலவு செய்ய தூண்டுவதை சுட்டிக்காட்டுகின்றன.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் அதாவது கடன் வர்த்தகத்தை தனிநபர் கடன் மூலம் விரிவுபடுத்தியுள்ளன, இக்காலக்கட்டத்தில் வணிக கடன்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது.

முக்கிய பிரச்சனைகள்: இந்தியாவில் பாதுகாப்பற்ற கடன் அதிகரிப்பு நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை பிரச்சனையை உருவாக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தவிர, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் உயர் பணவீக்கத்திற்கு மத்தியில் பாதுகாப்பற்ற கடன்கள் பிரிவு விரிவடைந்து பலர் கடன் திருப்பி செலுத்த முடியாமல் போகும் அபாயமும் உள்ளது.

இந்தியா மட்டும் இல்லை: தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு பெரிய பொருளாதார நாடுகளும் அதிகப்படியான பணவீக்க பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது. இவ்விரு நாடுகளிலும் கிரெடிட் கார்டு செலவுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, அமெரிக்காவில் கிரெடிட் கார்டு கடன் அளவு $1 டிரில்லியனைத் தொட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+