அவசரக் காலங்களில் பணம் தேவைப்படும்போது மக்கள் கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன்களை தான் அதிகம் பெறுகின்றனர். இந்த இரண்டும் கடன் பெறுவதற்கு பொதுவான ஆப்ஷன்களாக இருப்பதால் எதைத் தேர்ந்தெடுப்பது நல்லது? என்பதில் அடிக்கடி குழப்பம் வருகிறது. இந்தப் பதிவில் தனிநபர் கடன்கள் சிறந்ததா? அல்லது கிரெடிட் கார்டு கடன்கள் சிறந்ததா? என்பதைத் தான் பார்க்கவுள்ளோம்.
கிரெடிட் கார்டுகளும் சரி.. பர்சனல் லோன்களும் சரி.. வெவ்வேறு நோக்கங்களையும், நன்மைகளையும் கொண்டுள்ளன. எனவே இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வொருவரின் நிதித் தேவையைப் பொறுத்தது. இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டால் உங்களுக்கு தேவையான கடனைச் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்.

கிரெடிட் கார்டுகள்: கிரெடிட் கார்டுகளை விரும்பி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்று பார்த்தால் அதற்கு வழங்கப்படும் சலுகைக் காலம். இந்தச் சலுகைக் காலத்திற்குள் கடன் பெற்றவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தி விட்டால் வட்டி கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை. அதேபோல கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு ரிவார்ட் பாய்ண்டுகளும் கிடைக்கும். இதை பின்னர் பரிசுகளாகவோ அல்லது ஷாப்பிங் செய்வதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். சில கிரெடிட் கார்டுகள் விமான நிலைய ஓய்வறையை இலவசமாக பயன்படுத்தும் வசதி, கேஷ் பேக் மற்றும் தள்ளுபடிகள் போன்ற பல சலுகைகளை வழங்குகின்றன.
தனிநபர் கடன்கள்: பர்சனல் லோன் என்று சொல்லப்படுகிற தனிநபர் கடன்கள் ஒரு பிணையமற்ற கடனாகும். கோல்ட் லோன்களை பெறும்போது தங்கம் அங்கு பிணயமாக வைத்துக் கொள்ளப்படும். ஆனால் தனிநபர் கடன்கள் எந்தவித பிணையமும் இன்றி வழங்கப்படுகிறது. இந்தியாவில் பர்சனல் லோன் பெறுவதற்கு, கடன் பெற விண்ணப்பிப்பவரின் கடன் வரலாறு, கிரெடிட் ஸ்கோர், வருமான ஆதாரம் மற்றும் நிதிநிலைத் தன்மை ஆகியவை முக்கியம்.
ஏனெனில் கடன் வழங்குனர்கள் ரூ. 50 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை வழங்குகின்றனர். கிரெடிட் கார்டுகளைப் போல இந்த வகை கடன்களுக்கு எந்த வித ரிவார்ட் புள்ளிகள் மற்றும் தள்ளுபடிகள் கிடையாது. பர்சனல் லோன்களின் முக்கிய நன்மைகளில் ஒன்று கிரெடிட் கார்டு கடன்களை விட இதற்கு வட்டி குறைவு.
கிரெடிட் கார்டுகளுக்கான அதிகபட்ச வரம்பு: கிரெடிட் கார்டை வழங்கும் போது கடன் பெறுபவர்களின் திருப்பிச் செலுத்தும் திறன், கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் வங்கிகள் அதிகபட்ச கிரெடிட் கார்டு வரம்பை நிர்ணயிக்கும். இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு வழங்குவதற்கு உச்சவரம்பை நிர்ணயிக்கவில்லை. ஆனால் இவை கடன் பெறுபவரின் மாத வருமானத்தில் 2 மடங்கு வரை இருக்கும்.
தனிநபர் கடன்களுக்கான கடன் வரம்பு: கிரெடிட் கார்டுகளைப் போலவே, தனிநபர் கடன் தகுதியும் கடன் வாங்கியவரின் கிரேடிட் ஸ்கோர், வங்கியின் விதிமுறைகள், வருமானம் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
தனி நபர் கடன்களைப் பொறுத்தவரையில் சில வங்கிகள் அதிக அளவில் தொகையை கடனாக வழங்குகின்றன. உதாரணமாக பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற சில கடன் வழங்குனர்கள் ஒருவரின் வருமானத்தோடு ஒப்பிடுகையில் 15 மடங்கு அதிகமான கடனை வழங்குகின்றன.
வட்டி விகிதங்கள்: வட்டி விகிதங்களைப் பொறுத்தவரையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வெவ்வேறு மாதிரியான வட்டியை வசூலிக்கின்றன. இந்த வட்டி விகிதங்கள் மாதத்திற்கு 2.4 சதவீதம் முதல் 3.8 சதவீதம் வரை இருக்கலாம். பல்வேறு வங்கிகளால் வழங்கப்படும் கிரெடிட் கார்டு வட்டி ஆண்டுக்கு 30 முதல் 48 சதவீத வரையில் இருக்கலாம்.
மொத்த அங்கீகரிக்கப்பட்ட தொகை அல்லாமல் நிலுவைத் தொகைக்கு தான் இந்த வட்டி. ஆனால் தனிநபர் கடன்களுக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இதுவும் கடன் வழங்குனரின் பாலிசியை பொறுத்து மாறுபடும்.
வங்கியின் வட்டி தொகை கடன் வாங்கியவரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்தை பொருத்தும் மாறலாம். பல கடன் வழங்குனர்கள் குறைந்த வட்டி விகிதங்களில் கடன்களை வழங்குகின்றன. இரண்டுமே அவற்றுக்கான நன்மை மற்றும் தீமைகளை கொண்டுள்ளன. எனவே உங்களுக்கு ஏற்ற கடனை தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்களுடைய நிதி தேவைகள் வருமான ஆதாரம், விதிமுறைகள் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் கடன் பெறுங்கள்!
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications