கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு சக்திவாய்ந்த வாரி வழங்கும் அட்சய பாத்திரமாகும். கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலம் கணிசமான அளவு கேஷ்பேக், வெகுமதி புள்ளிகள், கிஃப்ட் வவுச்சர்கள் மற்றும் விமானத்தில் பயணம் செய்வதற்கான சலுகைகள் எனப் பலவற்றைப் பெறலாம். சில செயலிகளில் தனிப்பட்ட முறையில் கிப்ட், பில் பேமெண்ட்-ல் ஆஃபர்களையும் வழங்குகிறது.
இவை அனைத்தையும் பெற நம்முடைய அன்றாடத் தேவைகளுக்குச் செலவழிப்பதன் வாயிலாக எளிதாகப் பெற முடியும். இருப்பினும், நம்ம ஊர் மக்கள் கிரெடிட் கார்ட் ரிவார்ட் பாயிண்ட் பெற என்னவெல்லாம் ஐடியா பண்றாங்க தெரியுமா, நீங்களே கொஞ்சம் பாருங்க.

1. சில தனிநபர்கள் கிரெடிட் கார்டு வைத்து வங்கிகளுக்கே தண்ணி காட்டுகின்றனர். கிரெடிட் கார்டால் கிடைக்கும் லாபங்களை அடைய குறிப்பிட்ட அமவுண்ட் அளவுக்கு செலவழிக்க வேண்டுமல்லவா, அதை எட்டிப்பிடித்து, வெகுமதிகளைப் பெறுவதற்கு அவர்கள் அதிக மதிப்புள்ள காப்பீட்டு திட்டத்தைக் கிரெடிட் கார்ட் மூலம் வாங்குகிறார்கள். பின்னர், free-look கேன்சல் செய்யும் காலத்தில், அவர்கள் காப்பீட்டுக் கொள்கையை ரத்துசெய்து, பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால் கிரெடிட் கார்டில் செலவிட்டது செலவிட்டதுதானே. அது வங்கியில் பதிவாகியிருக்குமல்லவா. எனவே அதற்கான பாயிண்ட்சை இவர்கள் சம்பாதித்துவிடுகிறார்கள்.
2. சிறிய நகரங்களில் பல்வேறு டிஜிட்டல் சேவைகள், இண்டர்நெட் சென்டர் மூலமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது, குறிப்பாகப் பில் பேமெண்ட், ஷாப்பிங் ஆகியவற்றை மக்கள் இங்குதான் பெறுகிறார்கள். அவை அனைத்திற்கும் இண்டர்நெட் சென்டர் உரிமையாளர் தன்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி கொள்கிறார். அடுத்தவருக்கான செலவீனத்தையும் தனது கிரெடிட் கார்டை வைத்து பயன்படுத்திக் கொண்டு அதிகப்படியான ரிவார்ட் பாயிண்ட் பெறுகின்றனர்.
3. பல காப்பீட்டு முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காப்பீட்டுப் பிரீமியங்களைச் செலுத்த தங்களுடைய பர்சனல் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலுத்திவிட்டு, பின்பு வாடிக்கையாளரிடம் பணமாகவோ அல்லது சேமிப்பு கணக்கிலோ, UPI மூலமோ பணத்தை பெறுகின்றனர். இத்தகைய இன்சூரன்ஸ் பேமெண்ட்-க்கும் ரிவார்ட் பாயிண்ட் உண்டு.
4. பல நிறுவனங்களின் ஓனர்கள் தங்களுடைய கரண்ட் பில், இண்டர்நெட் பில் ஆகியவற்றை, ரிவார்ட் பாயிண்ட் பெற பர்சனல் கிரெடிட் கார்ட் வாயிலாகச் செலுத்துகிறார்கள். இது வங்கி விதிமுறைகள் படி மிகவும் தவறு. தனிநபர் பிரிவில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
5. கிரெடிட் கார்டு வரம்புகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க இன்னொரு வழியும் பயன்படுத்தப்படுகிறது. தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டு, இது வீட்டு வாடகை என்று கணக்கில் காட்டிக்கொள்கிறார்கள். அதன் மூலமும் வெகுமதி புள்ளிகளையும் பெறுகின்றனர்.
6. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடிக்காக ஒரே கிரெடிட் கார்ட்-ஐ பலரும் பயன்படுத்துகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் இப்படி ஷேர் செய்துகொண்டு பயன்படுத்துகிறார்கள். இதுவும் வங்கி விதிமுறைகளின்படி மிகவும் தவறு.
ஒரு சிலர் கிரெடிட் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் தற்போது வங்கிகள் சில முக்கியமான பிரிவில் செலவு செய்வதில் அளிக்கும் வெகுமதி புள்ளிகளை நிறுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களாகப் பல வங்கிகள் யூட்டிலிட்டி பில், இன்சூரன்ஸ், வீட்டு வாடகை தொடர்பான பேமெண்ட்-க்கு வெகுமதி புள்ளிகளை அளிப்பதை நிறுத்தியுள்ளது.
அக்டோபர் 2023 வரையில் இந்தியாவில் சுமார் 9.5 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது, தற்போது வங்கிகள் எடுத்துள்ள முடிவின் காரணமாகப் பலர் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அடிப்படை செலவுகளைக் கிரெடிட் கார்ட் வாயிலாகச் செய்வது மூலம் கிடைக்கும் நன்மைகளை இழந்துள்ளனர்.
இனி வரும் நாட்களில் அனைத்து வங்கிகளும், கிரெடிட் கார்ட் நிறுவனங்களும் யூட்டிலிட்டி பில், இன்சூரன்ஸ், வீட்டு வாடகை போன்ற அடிப்படை சேவைகளுக்குப் பணம் செலுத்துவதில் வெகுமதி புள்ளிகளை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளன.
சமீபத்தில் ரூபே கிரெடிட் கார்டுகளை யூபிஐ செயலி மூலம் இணைத்துப் பேமெண்ட் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளதன் மூலம் வெகுமதி புள்ளிகளை வழங்குவதை நிறுத்தினாலும் கிரெடிட் கார்ட் பயன்பாடு அதிகரிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications