கிரெடிட் கார்டுகளை பெற்றவராக இருந்தால்.. "உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பை அதிகரிக்க நீங்கள் தகுதியுடையவர்" என்று கூறும் மெசேஜ்களை கிரெடிட் கார்டு பெற்ற வங்கிகள் அல்லது கிரெடிட் கார்டு வழங்குனர்கள் அவ்வப்போது அனுப்பலாம். அதிகமான கிரெடிட் லிமிட் தேவைப்படும் நபர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு விடுகின்றனர். சிலர் ஏற்கனவே கிரெடிட் கார்டில் உள்ள வரம்பை விட குறைந்த அளவில் பயன்படுத்திகின்றனர். உங்களுடைய வங்கி கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க பரிந்துரைத்தால் அவற்றை ஏற்கும் முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
கிரெடிட் லிமிட் அதிகரிப்பது என்றால் என்ன?: பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட கிரெடிட் லிமிட் இருக்கும். உதாரணமாக, உங்கள் கிரெடிட் கார்டுக்கு ரூ. 5 லட்சம் கிரெடிட் லிமிட் இருக்கலாம். இதன் பொருள், நீங்கள் ரூ. 5 லட்சம் வரை கார்டைப் பயன்படுத்தலாம். மாதாந்திர பில் உருவாக்கப்பட்டதும், நீங்கள் முழு நிலுவையையும் செலுத்தியதும், முழு கிரெடிட் லிமிட்டும் நிரப்பப்படும். அதன் பின் வங்கி உங்கள் கிரெடிட் கார்டில் தற்போதைய ரூ. 1 லட்சம் கிரெடிட் லிமிட்டை ரூ. 2.5 லட்சமாக அதிகரிக்கும்.

வங்கி ஏன் கிரெடிட் லிமிட் அதிகரிப்பை வழங்குகிறது?: வங்கிகள், வாடிக்கையாளர்களின் தகுதியைப் பொறுத்து கிரெடிட் லிமிட் அதிகரிப்பு குறித்து செய்தியை SMS, வாட்சப், மெயில் போன்றவற்றின் மூலம் அவ்வப்போது தகவல்களை அனுப்புகின்றன.
வாடிக்கையாளர்கள் அதிக கிரெடிட் லிமிட்டுடன் அதிக செலவு செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் வங்கிகள் இந்த சலுகைகளை அனுப்புகின்றன. வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை அதிகமாகப் பயன்படுத்தும்போது, வங்கி அதிக வருவாய் ஈட்டும். இந்தக் கிரெடிட் லிமிட் அதிகரிப்பு சலுகை என்பது கடந்த கால கிரெடிட் ஸ்கோர் அதிகரிப்பு, வருமான அதிகரிப்பு, கடந்த கால செலவு முறை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
கிரெடிட் லிமிட் அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்: கிரெடிட் கார்டு லிமிட் அதிகரிப்பு என்பது, உங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்கும் வாய்ப்பாகும். இதை ஏற்றுக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
கிரெடிட் பயன்பாட்டு விகிதம்: கிரெடிட் பயன்பாட்டு விகிதம் என்பது மொத்தக் கடன் வரம்பிலிருந்து பயன்படுத்தப்படும் கடன் வரம்பைக் குறிக்கிறது. உதாரணமாக, ப்ரியா என்ற கிரெடிட் கார்டு பயனரின் கடன் வரம்பு ரூ. 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ப்ரியா ஒரு பில்லிங் சைக்கிளில் ரூ.60,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு கார்டைப் பயன்படுத்துகிறார் என்றால் ப்ரியாவின் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் 60 சதவீதமாக இருக்கும்.
30% அல்லது குறைவான கிரெடிட் பயன்பாட்டு விகிதம் CIBIL போன்ற கிரெடிட் தகவல் நிறுவனங்களால் நல்ல நடத்தையாகக் கருதப்படுகிறது. மேலும் இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவுகிறது. 30%-க்கும் அதிகமான கிரெடிட் பயன்பாட்டு விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
இப்போது ப்ரியாவுக்கு கிரெடிட் லிமிட் அதிகரிப்பு சலுகை வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். வங்கி, அவருடைய கிரெடிட் கார்டு லிமிட்டை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கிறது. இந்த சலுகையை ப்ரியா ஏற்றுக்கொண்டு, ஒரு பில்லிங் சைக்கிளில் ரூ. 60,000 செலவழித்தால், அவருடைய கிரெடிட் பயன்பாட்டு விகிதம் 60 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறையும். எனவே, அதிக கிரெடிட் லிமிட்டின் மூலம், ப்ரியாவின் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் குறைவாக இருக்கும். இது அவருடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்.
பிரீமியம் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது: அவ்வப்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களின் தற்போதைய கிரெடிட் கார்டு தகுதியின் அடிப்படையில் பிரீமியம் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.
அவசரத்தின் போது உதவுகிறது: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது பிற நிதி அவசரங்களின் போது, அதிக லிமிட் கொண்ட கிரெடிட் கார்டு உங்களுக்கு உதவியாக இருக்கும். அவசரத்தின் போது, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவுடன், கிரெடிட் கார்டு கட்டணம் வரவுள்ள வரை பணத்திற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய நேரம் கிடைக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications