கிரெடிட் சூசி குரூப் ஏஜி அதன் அறிக்கையில் 1.6 பில்லியன் டாலர் இழப்பினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அதன் வங்கி வணிகம் மற்றும் சந்தை நிலை, வெல்த் மேனேஜ்மென்ட் சேவை என பலவும் வரவிருக்கும் மாதங்களில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வங்கி குழுமம் கடந்த அக்டோபர் 27, 2022லேயே, சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலை மற்றும் சந்தை நிலைக்கு மத்தியில், தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் தான் செலவினைக் குறைப்பு நடவடிக்கையினை எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக படிப்படியாக ஆட்குறைப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
நஷ்டம் அதிகரிக்கலாம்
குறிப்பாக இதன் தாக்கம் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இருக்கலாம் என கணித்துள்ளது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இந்த நிதி நிறுவனம் நஷ்டத்தினை காணலாம் என கணித்துள்ளது.
நிதி திரட்ட திட்டம்
இதற்கிடையில் இந்த நிதி குழுமம் 4 பில்லியன் பிராங்குகள் மூலதன நிதியினை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதன் பங்குதாரர்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு புறம் மூலதனத்தினை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது எனில், மறுபுறம் செலவினை குறைக்கும் திட்டத்தினையும் தீட்டி வருகின்றது.
செலவு குறைப்பு நடவடிக்கை
செலவு குறைப்பு நடவடிக்கையில் முக்கியமாக 2025ம் ஆண்டிற்குள் 9000 பேரை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இது 4வது காலாண்டில் 2700 பேருடன் பணி நீக்கத்தினை தொடங்கியுள்ளதாகவும் ப்ளும்பெர்க் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எத்தனை பேர் பணி நீக்கம்
இது 9000 பேர் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், உண்மையான நம்பர் என்பது செயல்திறன் மற்றும் நிலவி வரும் மந்த நிலை என பல காரணிகளை கொண்டு மாறுபடலாம் என தெரிவித்துள்ளது. ஆக இந்த அறிக்கையின் மூலம் பணி நீக்கம் என்பது 9000 பேரை தாண்டியும் இருக்கலாம் என்ற கவலையும் இருந்து வருகின்றது.
வணிக வளர்ச்சி சரிவு
இந்த நிதிக் குழுமத்தின் வைப்பு தொகையானது குறைந்துள்ளது. அதே சமயம் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பும் குறைந்துள்ளது. இது மேற்கொண்டு அதன் வளர்ச்சி விகிதத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் சவால்கள்
நவம்பர் 11 வரையில் 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு 6% சரிவினை கண்டது. ஆக இது மேற்கொண்டு கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து இந்த விகிதமானது குறைந்து வருகின்றது. மொத்தத்தில் நிறுவனம் பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
நிதித்துறை ஊழியர்கள் கவலை
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணி நீக்கத்தினை அறிவித்துள்ளன. எனினும் இவை அனைத்தும் டெக் நிறுவனங்களாகும். ஆனால் ஒரு நிதி நிறுவனமாக கிரெடிட் சூசுசி எடுத்திருக்கும் இந்த முடிவானது நிதி துறைகளும் அழுத்தம் காணத் தொடங்கியுள்ளதனை சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. இது நிதி துறை ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications