சுவிஸ் நாட்டின் 2வது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் கிரெடிட் சூயிஸ்-யில் சவுதி நேஷ்னல் வங்கி 10 சதவீத பங்குகளை ஏற்கனவே வாங்கிவிட்டதால் இதற்கு மேல் முதலீடு செய்ய முடியாது என அறிவித்துவிட்ட நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காமல் 2 சுவிஸ் பிராங்க் என்ற பென்ச்மார்க் விலையில் இருந்து வரலாற்றில் முதல் முறையாக 30 சதவீதம் சரிந்து 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் குறைந்தது.
இதன் எதிரொலி ஒட்டுமொத்த ஐரோப்பிய வங்கி துறையை கடுமையாக பாதித்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தையும் பாதித்தது. இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக Credit Suisse தனது பணப்புழக்க பிரச்சனையை சரி செய்ய சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank -ல் இருந்து 54 பில்லியன் டாலர் அதாவது 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவிலான தொகையை கடனாக பெற்றுள்ளது.
இதன் மூலம் சர்வதேச வங்கி திவால் அச்சத்தின் அளவு முதலீட்டாளர்கள் மத்தியில் தணிந்துள்ளது, ஆனால் கட்டாயம் முழுமையாக மீளவில்லை.
3 அமெரிக்க வங்கி
அமெரிக்காவில் இதுவரையில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் பேங்க், சில்வர்கேட் பேங்க் ஆகிய 3 வங்கிகள் வங்கி சேவைகளை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதை தொடந்து நேற்று சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான Credit Suisse புதிய நிதியை திரட்ட முடியாமல் பணப்புழக்க பிரச்சனையில் மாடிக்கொண்டது.
கிரெடிட் சூயிஸ் - சவுதி நேஷ்னல் வங்கி
கிரெடிட் சூயிஸ்-ன் முக்கிய முதலீட்டாளரும், பங்குதாரருமான சவுதி நேஷ்னல் வங்கி -யின் சேர்மன் Ammar Al Khudairy, எங்களால் இனி கிரெடிட் சூயிஸ் பங்கு இருப்பை அதிகரிக்க முடியாது என அறிவித்தார். சுவிஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறையின் கீழ் 10 சதவீத பங்குகளுக்கு மேல் முதலீடு செய்து வாங்க முடியாது என்பதால் இனி முதலீடு செய்ய முடியாது என அறிவித்தார்.
கிரெடிட் சூயிஸ் பங்குகள்
இதன் பின்பு தான் கிரெடிட் சூயிஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 30 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, 2 சுவிஸ் பிராங்க் கீழ் வரலாற்றிலேயே முதல் முறையாக 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் சரிந்துள்ளது.
முக்கிய பிரச்சனை
கிரெடிட் சூயிஸ் தனது வருடாந்திர அறிக்கையில் உள் நிர்வாகத்தில் material weaknesses இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது. Credit Suisse வங்கி மீண்டும் லாபகரமான நிறுவனமாக மாற 3 ஆண்டு மறுசீரமைப்பு திட்டத்தின் மத்தியில் இருக்கும் வேளையில் அமெரிக்க வங்கிகளின் திவால் மற்றும் சவுதி நேஷ்னல் வங்கி அறிவிப்பு மூலம் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
FTX திவால்
அமெரிக்காவில் FTX திவாலானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்நாட்டு நிதியியல் சந்தையில் பெரும் பிரச்சனைகள் வெடிக்க துவங்கியது. இதேவேளையில் பணவீக்கத்தை சமாளிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கிய காரணத்தால் பத்திர முதலீடுகள் அதிகரித்தது, வங்கி கடனை நம்பியிருக்கும் வர்த்தகம் அதிகப்படியாக பாதிக்கப்பட்டது.
டெபாசிட் - வித்டிராவல்
இதன் வாயிலாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி தேவைக்காக அதிக வட்டி விகிதம் காரணமாக கடன் வாங்குவதை நிறுத்திவிட்டு வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகையை வெளியில் எடுக்க முடிவு செய்தது. ஒருகட்டத்தில் புதிய டெபாசிட் வருவதை காட்டிலும் வித்டிராவல் அதிகரித்தது. இதனால் பல வங்கிகளின் முதலீடுகள், நிதி ஆதாரங்கள் பாதிக்கப்பட்டது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications