இந்தியா பல்வேறு வளங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாக இருந்து வருகின்றது. இங்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் தனி நபர்கள் என பலரும் முதலீடு செய்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள 15 வெளிநாட்டு வங்கிகள் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் கிரெடிட் சூசியும் ஒன்று. இவ்வங்கி இந்தியாவில் 20,000 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துகளை வைத்துள்ளது.
கடன் பத்திரங்களில் முதலீடு
ஜெஃபரீஸ் கருத்துப்படி, கிரெடிட் சூசி-ன் சொத்துகளில் 70 சதவீதம் அரசு பத்திரங்கள் வடிவில் உள்ளன.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனமானது, டெரிவேட்டிவ் சந்தையில் குறிப்பிடத்தக்க இருப்பை கொண்டுள்ளது. அதன் சொத்துகளில் 60% கடனில் உள்ளது. இதில் 96% இரண்டு மாதங்கள் வரையிலான கால அவகாசத்தினை கொண்டுள்ளது என ஜெஃபரீஸ் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கண்கானிப்பு
அமெரிக்காவில் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிலிக்கான் வேலி வங்கியை காட்டிலும், கிரெடிட் சூசி இந்திய நிதி அமைப்புக்கு மிகவும் பொருத்தமானது என்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
மேலும் இந்திய வங்கிகளை உன்னிப்பாக ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகின்றது. ஆக இங்கு ஏதேனும் பிரச்சனை எனில், மத்திய வங்கி உடனே நடவடிக்கை எடுக்கும். பிரச்சனைகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதனை ரிசர்வ் வங்கி தலையிட்டு முடித்து வைக்கும்.
கடன் & டெபாசிட்
குறிப்பாக பணப்புழக்க பிரச்சனை என்பது இருந்தால், அது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கும். இதற்கிடையில் அமெரிக்காவின் வெளி நாட்டு வங்கிகளின் இருப்பு நிலை பெரியளவில் இல்லை. இது மொத்த அசெட்களில் வெறும் 6% ஆகவும், கடனில் 5% பங்கும் வகிக்கின்றன. ஆக இவ்வங்கியில் ஏதேனும் பிரச்சனை என்றால் கூட, அதான் இந்தியாவுக்கு பிரச்சனை பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகின்றது.
கடும் வீழ்ச்சி
இப்படி பல்வேறு சூழலுக்கும் மத்தியில் சுவிஸ் வங்கியில் இனி எந்த முதலீடும் செய்யப்போவதில்லை என சவுதி நேஷனல் வங்கி கூறியதை அடுத்து இதன் பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன.
சவுதி நேஷ்னல் வங்கி-யில் சவுதி அரேபிய அரசின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் சுமார் 37% பங்குகளை கொண்டு உள்ளது. இந்த நிலையில் சவுதி நேஷனல் வங்கி கிரெடிட் சூசியில் கடந்த ஆண்டு 9.9% பங்குகளை சுமார் 1.4 பில்லியன் பிராங்க் தொகைக்கு வாங்கியது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications