கிரெடிட் சூசி ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. ஆட்டத்தைத் துவங்கியது UBS..!!

2023 ஆம் ஆண்டு வங்கித்துறைக்கு மிகவும் மோசமான காலகட்டம் என்றால் மிகையில்லை அமெரிக்கா முதல் சுவிஸ் வரையில் வல்லரசு நாடுகள், பண பலம் அதிகம் கொண்ட நாடுகளின் வங்கிகள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகி மூடப்பட்ட இதே காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் கிரெடிட் சூசி திவாலாகும் நிலையில் இருந்த நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய வங்கியான UBS குரூப் கைப்பற்றியது.

இந்த நிலையில் கிரெடிட் சூசி நிறுவனத்தைக் கைப்பற்றி வர்த்தகத்தை மொத்தமாக இணைக்கப்பட்ட நிலையில், தற்போது நிர்வாக மாற்றங்களைச் செய்யத் துவங்கியுள்ளது UBS குரூப். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேகமாக நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கிரெடிட் சூசி ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. ஆட்டத்தைத் துவங்கியது UBS..!!

பணப்புழக்க நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை 3 பில்லியன் சுவிஸ் பிராங்க் தொகைக்கு UBS குரூப் வாங்கியது . இந்த நிலையில் UBS - கிரெடிட் சூயிஸ் கூட்டணி அடுத்தகட்டத்திற்கு வேகமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, UBS நிர்வாகம் தனது முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Sergio Ermotti ஐ மீண்டும் CEO பதவியில் பணியமர்த்தியது UBS Group.

Sergio Ermotti வருகை மூலம் வர்த்தக இணைப்புகள் வேகமாக நடந்த நிலையில் தற்போது கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தில் 10 சதவீத சப்போர்ட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணிநீக்கம் மூலம் கம்பிளையன்ஸ், ரிஸ்க், மார்கெட்டிங் ஆகிய பிரிவில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

பணிநீக்க அறிவிப்புகளைக் கிரெடிட் சூசி நவம்பர் 9 ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அறிவிக்க உள்ளது. UBS - கிரெடிட் சூயிஸ் கூட்டணி மூலம் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 120000 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கையைக் குறைப்பது மூலம் நிர்வாகப் பணிகள் எளிதாவது மட்டும் அல்லாமல் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

ஏற்கனவே அனைத்து முன்னணி நிதி சேவை நிறுவனங்கள், வங்கிகள், முதலீட்டு வங்கிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கி நிர்வாக மற்றும் முதலீட்டு முடிவுகளை வேகமாகவும், பிழையில்லாத தீர்வுகளை AI மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் வங்கித் துறையில் இருக்கும் ஊழியர்கள் உலகளவில் அச்சத்துடனே உள்ளனர்.

அமெரிக்காவில் இருக்கும் முன்னணி வங்கிகள் அனைத்துச் செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்காகத் தனி டீம், தனி முதலீட்டை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் எந்த அளவுக்குத் துல்லியமாக்க உள்ளது என்பதை 360 கோணத்திலும் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முதலீட்டிலும், அதன் லாபத்திலும் பலன் கொடுத்தால் முதலீட்டு வங்கித் துறையில் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் பிற கடினமான முதலீட்டுச் சந்தைக்கு மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+