இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராகவும், பெரும் பணக்காரராகவும் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு இருக்கும் இன்னொரு முகம் வெற்றிகரமான விளையாட்டுத் தொழிலதிபர்களில் ஒருவர் என்பது தான். முகேஷ் அம்பானி ஐபிஎல் அணியை வாங்கியது முதல் கிரிக்கெட் மையப்படுத்தி அதிகப்படியான வர்த்தகம், முதலீடு, விளம்பரம் ஆகியவற்றை இவர் உருவாக்க முக்கியக் காரணம் அவருடைய தந்தை.
முகேஷ் அம்பானி-யின் தந்தை திருபாய் அம்பானி கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் என்பது பலருக்குத் தெரியாது. இந்தியாவில் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1987-ல் நடந்தது, அதை ஏற்படுத்தியவர் திருபாய் அம்பானி.

இந்தியாவின் வரலாற்று வெற்றி: 1983 ஆம் ஆண்டில் வலிமைமிக்க மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா உலகச் சாம்பியனாது, அந்த நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டு உலகளவில் முன்னெப்போதும் இல்லாததை விடவும் மிகவும் பிரபலமாக இருந்தது. 1983 ஆம் ஆண்டு வரை, அனைத்துக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் தான் நடந்தது.
முக்கியமான மாற்றம்: அடுத்த உலகக் கோப்பை போட்டிகள் 1987ல் உலகக் கோப்பை போட்டிகளை இங்கிலாந்துக்கு வெளியில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கை தங்களஅ நாட்டில் 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த போட்டிப்போட்டது.
இந்தியாவும் - பாகிஸ்தானும் : 1987 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தக் களமிறங்கியபோது, இங்கிலாந்து 1983ல் கொடுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமான பணத்தை வழங்கியது. 1987 உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை இந்தியாவும் - பாகிஸ்தானும் பெற்றிருந்து.
ஆனால் அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அதன் பங்கை செலுத்த போதுமான பணம் இல்லை. இந்த நிலையில் கிரிக்கெட் வாரியம் ஸ்பான்சர்களை அணுகிய பிறகும், பணத்தைத் திரட்ட முடியவில்லை.
திருபாய் அம்பானி : அந்த நெருக்கடியான தருணத்தில், திருபாய் அம்பானி முன்வந்து போட்டிக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்தார். அதனால் தான் 1987 கிரிக்கெட் உலகக் கோப்பை பற்றி இணையத்தில் சர்ச் செய்தால் ரிலையன்ஸ் கப் 1987 என்ற பெயர் இடம்பெறும்.

அடையாளம்: ரிலையன்ஸ் கப் 1987 என அழைக்கப்படும் 1987 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி தான் நான்காவது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 1987 அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது.
50 ஓவர் மாற்றம் : இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்பட்ட முதல் போட்டி என்றாலும் இதிலும் ஆஸ்திரேலியா தான் வென்றது. இந்தப் போட்டியில் தான் ஒரு நாள் போட்டிகளில் ஓவர்களின் எண்ணிக்கையை 60லிருந்து 50 ஆகக் குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா வெற்றி : கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் கப் 1987 என அழைக்கப்படும் 1987 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது பரம எதிரியான இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
அரையிறுதியில் தோல்வி: 1987 உலக கோப்பை போட்டிகளை நடத்திய இரு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதியில் வெளியேறியதால், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. ஆனா இன்று நடக்கும் உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுதி தயாராக உள்ளது என நம்புவோம்.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதி போட்டி: கோப்பையுடன் சேர்த்து இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications