கொரோனா வைரஸால் உலகில் மொத்தம் 2.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 10,400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 223 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸால், உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி குட்டி குட்டி நாடுகள் வரை, ஒட்டு மொத்த உலக பொருளாதாரமுமே பெரிய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது.
இதில் இந்திய பொருளாதாரம் மட்டும் பாதிபடையாமல் இருக்க முடியாது. கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைத் தாண்டி அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் கூட பாதிக்கப்படலாம் எனச் சொல்லிக் கோண்டு இருந்தார்கள் அனலிஸ்ட்கள்.

அனலிஸ்டுகள் எதிர்பார்த்தது போலவே, அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் கூட, இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி குறையும் எனச் சொல்லி இருக்கிறது க்ரிசில் என்கிற ஒரு சர்வதேச நிறுவனம்.
2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5.7 சதவிகிதம் வரை வளர வாய்ப்பு இருப்பதாக முன்புச் சொல்லி இருந்தது க்ரிசில் நிறுவனம். ஆனால் இப்போது இந்த கொரோனா வைரஸ் என்கிற பெரும் தொற்று நோயால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.2 சதவிகிதமாக இருக்கலாம் எனக் குறைத்து இருக்கிறது.
வரும் ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டுக்குள் உலக அளவில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால், இந்த கொரோனா பாதிப்பு உலக பொருளாதாரத்தை மேலும் கடுமையாக மந்தப் படுத்திவிடும் எனச் சொல்லி எச்சரித்து இருக்கிறது க்ரிசில் நிறுவனம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இப்படி இந்தியாவில் வேகமாக கொரோனா பரவினால், இந்தியாவின் நுகர்வு, முதலீடுகள் மற்றும் உற்பத்தி எல்லாமே அடி வாங்கும். இது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையைக் குறைக்கும், நிதிச் சந்தைகள் எல்லாமே அடி வாங்கும் எனச் சொல்லி இருக்கிறது க்ரிசில் நிறுவனம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications